தமிழகத்தில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையானது, இடைவிடாது பெய்து வருவதாலும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விசூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் பலியாகினர். இதன் மூலம் பலியானோர் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடல்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
விசூரில் அருந்ததியர் காலனியில் வீரமணி என்பவரின் மனைவி செல்வி தனது குழந்தைகள் சிவா, வீரமுத்து, பவானி, மாரிமுத்து மற்றும் தினேஷ் ஆகியோர் குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த போது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
பிச்சம்மாள், பெருமாள் மற்றும் நடேசன் ஆகியோரும் அடித்துச் செல்லப்பட்டனர்.
மற்றொரு சம்பவத்தில் கொரானப்பட்டில் பூமிகா (10) என்ற சிறுமி வெள்ளத்தில் பலியானார்.
No comments:
Post a Comment