Wednesday, 4 November 2015

கரூர் அருகே பஞ்சாயத்து தலைவர் அ.தி.மு.க என்பதினாலேயே மூன்று வருடங்கள் ஆனது பதவி நீக்கத்தை தொடர்ந்து மாவட்ட அளவில் இதே போன்று செயல்களில் ஈடுபடும் பஞ்சாயத்து தலைவர்களையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் – பாதிக்கப்பட்டவர் புகார்




கரூர் அருகே உள்ள நெரூர் வடபாகம் பகுதியை சார்ந்தவர் நாகராஜன், இவர் இப்பஞ்சாயத்து தலைவர் மணிவண்ணன் அ.தி.மு.க என்பதினாலும், ஆட்சி அ.தி.மு.க ஆட்சி என்பதினாலும், போடப்படாத தார்சாலைகள், தெருவிளக்குகள், தெருவிளக்குகள் அதிக விலைக்கு வாங்கியதாக கடிதம் அனுப்புதல், வெறிநாய்க்கடி ஒழிப்பு போன்ற திட்டங்களில் பல்வேறு நிதி மோசடிகள் ஈடுபட்டுள்ளதாக, ஊராட்சி செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததோடு, அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஷோபனாவிடம் பல முறை புகார் அளித்தார். இது குறித்து எந்த வித பயனுமில்லாத நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீதிமன்ற உத்திரவிற்கிணங்க பல்வேறு கட்ட விசாரணைகளை தற்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி விசாரணை நடத்தினார். இந்நிலையில் பஞ்சாயத்து தலைவர் பதவியிலிருந்து அதிரடியாக மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி மணிவண்ணனை நீக்கியதற்கு வரவேற்பு அளிப்பதாகவும், இதே போல மற்ற பஞ்சாயத்துகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்காணித்து அவர்களையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்


No comments:

Post a Comment