தமிழக சட்டசபை தேர்தல் வரும் 2016 ம் வருடம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் இந்நிலையில் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளரை பாட்டாளி மக்கள் கட்சியினர் மருத்துவர் அன்புமணி இராமதாசுவை அறிவித்து பொதுக்கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்தி வந்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் முதல் முறையாக 2016 ம் வருடத்திற்கான சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ ஒருங்கிணைப்பாளராக செயல்படும் மக்கள் நலக் கூட்டியக்கத்தினர் கூட்டணியாக தாயகத்தில் அறிவித்தனர், இந்நிலையில் தற்போதே ம.தி.மு.க இணையதளத்தினர் கள வேலை பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த வாசகங்கள் ஓவ்வொருவரையும் உற்சாகப்படுத்துவதுடன், ஊக்குவிப்பது போல் அமைந்துள்ளன. இதில்
அய்யா அஞ்சு தடவை ஆண்டாரு..
இந்த அம்மா 3தடவை முதலமைச்சராகிட்டாங்க..
அவுங்கள இவங்க குறை சொல்லுறது. இவங்க அவுங்கள குறை சொல்லுறது..
அவுங்கள இவங்க குறை சொல்லுறது. இவங்க அவுங்கள குறை சொல்லுறது..
இப்ப புதுசா ஒன்னு சேர்ந்து இருக்கிறவங்க, அந்த காலத்துல, கட்சி ஆரம்பிச்சதுல இருந்து போராட்டம் ஆர்ப்பாட்டம்னு பண்ணிக்கிட்டே இருக்காங்க..
இவங்களுக்கு ஒரு தடவை ஓட்டு போட்டு பார்ப்போமே.. என்னதான் செய்யுறாங்கன்னு பார்ப்போம்.
கிராமத்து டீக்கடையில் நாளிதழ் பார்த்துக்கொண்டே ஒரு சாமானியனின் குரல். என வாசகங்களை ம.தி.மு.க இணையதளத்தினர் சக்கப் போடு போட்டு வருகின்றனர்
No comments:
Post a Comment