Thursday, 5 November 2015

வரப்போவது சட்டசபை தேர்தலா ? இல்லை நாடாளுமன்ற தேர்தலா ? பம்பரம் போல் சுழலும் வை.கோ - புது தில்லியில் பொது உடைமைக் கட்சிகளின் தலைவர்களுடன் வைகோ சந்திப்பு




மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, இன்று (5.11.2015) காலை பத்தரை மணி அளவில் புது தில்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான அஜய் பவனுக்குச் சென்றார். கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் செயலாளர் ஏ.பி.பரதன், தேசியச் செயலாளர் டி. இராஜா ஆகியோர் வரவேற்றனர். அவர்களுக்கு வைகோ பொன்னாடை போர்த்தினார்.
தமிழக அரசியலில் மக்கள் நலக் கூட்டணி அமைந்தது குறித்து இந்திய  கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தனர்.
‘வரும் நாட்களில் மக்கள் நலக் கூட்டணி தமிழக அரசியலில் பெரும் சக்தியாக உருவெடுக்கும்; ‘தொலைநோக்குப் பார்வையோடு இக்கூட்டணியை நீண்ட காலத்திற்கு முன்னெடுத்துச் செல்வோம்’ என்று வைகோ கூறியதை ஏற்றுக்கொண்டு, தாங்களும் அப்படியே கருதுவதாகத் தெரிவித்தனர்.
நவம்பர் 25 ஆம் தேதி கோவையில் நடைபெற இருக்கும் மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு வைகோ அழைப்பு விடுத்தார்.
‘தங்கள் கட்சியின் சார்பில் முக்கியத் தலைவர் கலந்து கொள்வார்’ என்று கூறினர்.
2016 பிப்ரவரி 9 ஆம் தேதி சென்னை காமராசர் அரங்கத்தில் நடைபெற இருக்கின்ற வைகோ பொதுவாழ்வுப் பொன்விழா நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கும் பொன்விழா மலர்க்குழுத் தலைவர் கணேசமூர்த்தியின் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட சுதாகர் ரெட்டி அவர்கள், ‘பொன்விழாவில் கலந்து கொள்வதாக உறுதி அளித்ததோடு, மலருக்கு வாழ்த்துக் கட்டுரையும் அனுப்பி வைப்பதாகக் கூறினார்.
இந்தச் சந்திப்பு ஒரு மணி நேரம் நடைபெற்றது.
இதன்பிறகு, பகல் 12 மணிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தலைமை அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனத்திற்கு வைகோ சென்றார்.
அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, பூங்கொத்து கொடுத்து வைகோவை வரவேற்றார்.
‘தமிழ்நாட்டில் தி.மு.க., அண்ணா தி.மு.க.வுக்கு மாற்றான ஒரு அரசியல் சக்தி உருவாவதுதான் தமிழகத்தின் அரசியல் தேவை’ என்று காலம் சென்ற ஹர்கிசன் சிங் சுர்ஜித் அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டதை நினைவுகூர்ந்ததோடு, ‘மக்கள் நலக் கூட்டணி வலுவுள்ள சக்தியாக உருவவெடுக்கும்’ என்று சீதாராம் யெச்சூரி நம்பிக்கை தெரிவித்தார். நவம்பர் 25 கோவை பொதுக்கூட்டத்திலும், 2016 பிப்ரவரி 9 இல் சென்னையில் நடைபெறும் வைகோ பொதுவாழ்வுப் பொன்விழா நிகழ்ச்சியிலும் தாம் கலந்து கொள்வதாகக் கூறினார்.
மலருக்கு வாழ்த்துக் கட்டுரை தருவதாகவும் குறிப்பிட்டார்.
தமிழக அரசியல் குறித்து இருவரும் ஒரு மணி நேரம் விவாதித்தனர்.
வரும் சட்டசபை தேர்தல் 2016 நடக்கிறது இது அனைவருக்கும் தெரியும் இந்நிலையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ பம்பரம் போல் சுழல்வதை பார்த்தாலும், ஆங்காங்கே பல்வேறு மாநில முதல்வரையும் நேரில் சந்தித்து வரும் பிப் மாதம் 9 ல் சென்னையில் நடைபெறும் பொன்விழா நிகழ்ச்சியில் கலக்கி வருவது தமிழக அளவில் மட்டுமில்லாமல் உலகளவில் வை.கோ கட்சியினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment