கேரளா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான இடதுசாரிகளின் முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது
கேரளா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் இடதுசாரிகள் தலைமையிலான கூட்டணியின் பிரதான கட்சிகளாக களம் கண்டன. 3வது அணியாக ஈழவா சமூகத்தின் எஸ்.என்.டி.பி இயக்கத்துடன் பாரதிய ஜனதா கட்சி கைகோர்த்து களம் இறங்கியது.
2 கட்டங்களாக நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது.
திருவனந்தபுரம், கண்ணூர் மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இடதுசாரிகள் அதிக இடங்களில் வென்றுள்ளன. இங்கு காங்கிரஸை பின்னுக்கு தள்ளி பாரதிய ஜனதா கட்சி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
திருச்சூர்,கொல்லம், கோழிக்கோடு மாநகராட்சிகளில் இடதுசாரிகள் அணி வெற்றி பெற்றுள்ளது. கொச்சியில் காங்கிரஸ் வெற்றி பெற்று உள்ளது.
பெரும்பாலான நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களையும் இடதுசாரிகள் கூட்டணி கைப்பற்றியுள்ளது. கொச்சியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. பாலக்காடு நகராட்சியில் பாரதிய ஜனதா அதிக வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது.
மலப்புரம், ஆழப்புழாவில் 2 வார்டுகளை பா.ஜ.க. கைப்பற்றி கணக்கைத் தொடங்கியுள்ளது. தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பஞ்சாயத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. மூணாறு தேவிகுளம் பஞ்சாயத்தில் ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்திய தமிழ் பெண்கள் போராட்ட குழுவின் தலைவர் கோமதி வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தம் உள்ள 938 பஞ்சாயத்துக்களில் இடது சாரிகள் கூட்டணி 545 பஞ்சாயத்துக்களையும், காங்கிரஸ் கூட்டணி364 பஞ்சாயத்துக்களையும், பாரதீய ஜனதா 16 பஞ்சாயத்துக்களையும் மற்றவர்கள் 14 பஞாயத்துக்களையும் கைபற்றி உள்ளன.
நகராட்சியை பொருத்தமட்டில் மொத்தம் உள்ள 86 நகராட்சிகளில் காங்கிரஸ் 41 நகராட்சிகளையும் இடது சாரிகள் 44 நகராட்சிகளையும் கைபற்றி உள்ளன. பாரதீய ஜனதா ஒன்றை கைபற்றி உள்ளது.
No comments:
Post a Comment