ஒரு வாரத்திற்குள் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அரிமா பேரியக்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கரூரில் 324 A 2 மாவட்ட ஆளுநர் உத்திரவின் பேரில் கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் சார்பில் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டன. கரூர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத் தலைவர் இன்ஜினியர் ஆர்.தினகரன், சங்க செயலாளர் பி.கார்த்திகேயன், பொருளாளர் கே.குமாரராஜா ஆகியோர் துவக்கி வைத்தனர். மண்டல தலைவர் சூர்யா வே.கதிரவன், மாவட்டத்தலைவர் எஸ்.கே.டி.கருப்பசாமி, அரசுக்கலைக்கல்லூரி முதல்வர் பாரி, பேராசிரியர்கள் செல்வக்குமார், லட்சுமண சிங், துரைபாண்டி, லியோ சங்க தலைவர் மோகன், லியோ மண்டல தலைவர் அங்குராஜ், செயலாளர் மணி கண்டன், பொருளாளர் ஜெய்கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்சியின் முதல் கட்டமாக சுமார் 300 மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்திலும், கல்லூரி சுற்றியுள்ள பகுதியிலும் நடப்பட்டன. இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment