கரூவூருக்கு வருகை புரிந்த கவியரசு வைரமுத்துவிற்கு கரூர் திருக்குறள் பேரவை மற்றும் தமிழிசை சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கரூர் தமிழிசை சங்க தலைவர் க.ப.பாலசுப்பிரமணியன், கரூவூர் திருக்குறள் பேரவை தலைவர் புளியம்பட்டி இராமசாமி, திருக்குறள் அறக்கட்டளை நிறுவனத்
தலைவர் டாக்டர் இரமேஷ், புரவலர்கள் ஆரா ஈசுவரமூர்த்தி, தீபம் சங்கர், குளித்தலை தமிழ்ப் பேரவை தலைவர் முனைவர் கடவூர் மணிமாறன், கவிஞர் சண்முக சிதம்பரம், தமிழ் பண்பாட்டு பேரவை நன்செய்ப் புகழூர் அழகரசன், கருவை வேணு, கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க தலைவர் இன்ஜினியர் தினகரன், தமிழ் வழிபாட்டு நெறியாளர் குமாரலிங்கம், வள்ளலார் அமைப்பு சுப்பிரமணியன் உள்ளிட்ட திரளானவர்கள் வரவேற்பு வழங்கினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் வரவேற்புரைக்கு ஏற்புரை வழங்கிய கவிஞர் வைரமுத்து, தன் பேச்சில், கரூர் பகுதி மக்களின் அன்பையும், தமிழ் ஆர்வலத்தையும் பாராட்டுகிறேன், நண்பர்களை சந்திக்க வந்த இடத்தில் என்னையும் உங்களையும் இணைத்தது தமிழும், திருக்குறளும், குழந்தைகளுக்கு தமிழையும், திருக்குறளையும் சொல்லிக்கொடுங்கள், இல்லையெனில் உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்களாக இல்லாமல் மாறி விடுகிறார்கள். மேலை நாட்டில் ஒரு தமிழ்குடும்பம் பல பில்லியன் பணம் இருந்தது. ஆனால் அத்தம்பதியர் தாம் தமிழ் பேசினார்களே, பேசிக் கொண்டார்களே தவிர, தன்னுடைய குழந்தைகளிடம் தமிழில் பேசவும் இல்லை, கற்றுக் கொடுக்கவும் இல்லை. ஒரு கட்டத்தில் அக்குடும்பத்தின் பெண்குழந்தை நீக்ரோ பையன் ஒருவனை திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டது. ஆண் பையனோ, அங்குள்ள பிரபலமான இசைக்குழு ஒன்றில் டிரம் வாசிப்பாளராக சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறினான். பெற்றோர்களோ, இந்த விரக்தியால், பல பில்லியன் சொத்துக்களை பில்கேட்ஸின் அறக்கட்டளைக்கு எழுதி வைத்து விட்டு அறக்கட்டளையின் சேவகர்களாக சேர்ந்து விட்டார்கள். தமிழ் கற்காததால் தமிழ் கற்றுக்கொடுக்காததால், தமிழ் பண்பாடு, கலாச்சாரம், தெரியாமல் போனதால், அக்குடும்பமே அழிந்தது என்பது நடந்த நிகழ்ச்சி. எனவே நம் குழந்தைகளுக்கு தாய் மொழியான தமிழையும் எல்லா அறங்களையும் சொல்லும் திருக்குறளையும் கற்றுக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனும், பள்ளி படிப்பை முடிக்கிற போது நூறு திருக்குறளாவது தெரிந்திருக்க வேண்டும். மாணவர்களை மையமாகவே வைத்து திருக்குறள் விழாக்கள் நடத்த வேண்டும். என்னுடைய சார்பில் ஆயிரம் மாணவர்களுக்கு திருக்குறள் நூல் வழங்கி கலந்து கொள்கிறேன் என்றார். தொடர்ந்து அண்மையில் முத்து விழா கண்ட திருக்குறள் பேரவையின் புரவலர் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி, அண்ணம்மாள் தம்பதியினரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
விழாவில் சிறப்பாக கரூர் பகுதியில் திருக்குறள் பணியாற்றும் மேலை.பழநியப்பனுக்கும் பாராட்டு தெரிவித்தார்.

No comments:
Post a Comment