செட்டிநாட்டு அரசரும்,
தமிழ் மொழிக்காவலருமான ராஜா சர் மு.அ.முத்தையா செட்டியாரின் 111 வது பிறந்த தின விழா
தமிழகம் மட்டும் இல்லாது உலகெங்கும் உள்ள மக்களின் சார்பில் தமிழ் மொழியாளர்கள், தொழில்
அதிபர்கள், நாட்டுக் கோட்டை நகரத்தார் சமுதாய மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்
கரூர் பசுபதீஸ்வரர் கோயில் முன்பு அமைந்துள்ள நகரத்தார் சங்க கட்டிடத்தில், கரூர் நகரத்தார்
சங்கம் சார்பில் செட்டிநாட்டு அரசரின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கரூர் நகரத்தார் சங்க தலைவர் அக்ரி சுப.செந்தில்நாதன் தலைமை வகித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செட்டிநாடு சிமெண்ட் ஆலையின் துணைத்தலைவர் (ஓர்க்ஸ்)
எ.அமல்ராஜ், செட்டிநாட்டு அரசர் இராஜா சர் அவர்களை பற்றியும் அவரது கல்வி பணி, தமிழ்
பணி, ஆன்மீகப் பணி இவைகளை பற்றி மாணவ, மாணவிகளுக்கு விளக்கினார். மேலும் பள்ளிக்குழந்தைகளுக்கு
இனிப்பு மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தார். முன்னதாக கரூர்
நகரத்தார் சங்க பொருளாளர் கே.எம்.குமரப்பன் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் திருக்குறள் பேரவையின் செயலாளர் மேலை.பழநியப்பன் கலந்து
கொண்டு செட்டிநாட்டு அரசர் செட்டிநாட்டு மக்களுக்கு மட்டுமில்லாமல் கல்வி, நாடு, மொழிக்காக
பல்வேறு நிறுவனங்களையும், தமிழிசை மன்றங்களையும், கல்விக் கூடங்களையும் உருவாக்கி,
அனைத்து தரப்பட்ட மக்களும் இன்று அவரின் நிறுவனங்களின் மூலம் பயனடைந்து வருகின்றனர்
என்றார். தமிழ் மொழிக்காக உழைத்த நல் மனிதர்
இவரின் பிறந்த நாளில், இராஜாசர் முத்தையா செட்டியார் பெயரிலேயே ஆண்டு தோறும் அந்த அறக்கட்டளை
சார்பில் வழங்கப்படும் விருதினை இந்த வருடம் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியாருக்கு
வழங்கப்படுவதையும் சுட்டி காட்டினார். இந்த விருது வாங்கும் அவருக்கு கரூர் தமிழ் ஆர்வலர்கள்
சார்பில் வாழ்த்துவதோடு வரும் 10 ம் தேதி கரூருக்கு வருகை தரும் அவருக்கு சிறப்பான
வரவேற்பு கொடுக்கப்பட உள்ளதாகவும் அறிவித்தார். இந்நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி முத்தையா,
செட்டிநாடு சிமெண்ட் ஆலையின் துணைப் பொதுமேலாளர் (மனித வளம்) பெரிய கருப்பன், நகரத்தார்
சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் ராம்.மெய்யப்பன், அருணாச்சலம், பி.எஸ்.கணேசன், எஸ்.பி.மோகன்,
கன.இராமையா, இராணி சீதை ஹால் பழநியப்பன், வீ.ஆர்.இராமையா, அண்ணாமலை, பாலாறு உள்பட பலர்
கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment