Tuesday, 4 August 2015

கரூரில் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவி பறிப்பிற்கு பின் உற்சாக மடைந்த அ.தி.மு.க – 3 நாட்களில் இவ்வளவு கூட்டமா அ.தி.மு.க கழக பொருளாளர் ஓ.பி.எஸ். காரசார பேச்சு

கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வகித்த வந்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி என்ன காரணத்தினால் கட்சி பதவி மற்றும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட என்று புரியாமல் இருந்து வந்த நிலையில் தமிழக முதல்வரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் உத்திரவிற்கிணங்க கரூர் மாவட்ட செயல் வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் கரூரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் முதல்வரும், கழக பொருளாளருமான ஓ.பன்னீர் செல்வம், மற்றும் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.  கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தற்போது முதல்வராக உள்ள ஜெயலலிதா கரூர் வருகை தந்த போது, மக்கள் வெள்ளத்தில் கரூர் இருந்தது போல் இன்று அமைச்சர் பதவி பறிப்பிற்கு பின்  நடைபெற்ற இக்கூட்டத்தில் அ.தி.மு.க உண்மை விசுவாசிகள், முன்னாள் அமைச்சரால் ஓரங்கட்டப்பட்ட அனைத்து அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், கழக முன்னோடிகள் தீபாவளியை போல் அ.தி.மு.க உற்சாக வெள்ளத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்போது பேசிய கழக பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், கலந்து கொண்டு பேசிய போது, எத்தனையோ செயல் வீரர்கள் கூட்டத்தில் தமிழக முழுவதும் கலந்து கொண்டுள்ளோம். ஆனால் கரூர் மாவட்ட பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட நாமக்கல் மாவட்ட செயலாளரும் தொழிற்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சருமான பி.தங்கமணி அறிவிக்கப்பட்ட பின்னர் 3 நாளில் இவ்வளவு கூட்டம் என்பது வியக்கத் தக்கதாக உள்ளதாகவும் இதை முதல்வரும் கழக நிரந்தர பொதுச் செயலாளருமான அம்மா மற்றற்ற மகிழ்ச்சி அடைவார்கள் என்று பேசினார். நன்றாக சிரித்து கொண்டிருந்த முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி முகம் சுளித்தது. இதை கண்ட மற்ற அ.தி.மு.க நிர்வாகிகள் உற்சாக மடைந்தனர்.  இந்நிகழ்ச்சியை வைத்தே கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க வினர் அனுபவித்து வந்த கஷ்ட நஷ்டங்களை கண்டிப்பாக கழக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் நிச்சயமாக அம்மாவிடம் எடுத்துக் கூறுவார்கள் என்பது அ.தி.மு.க உண்மை நிர்வாகிகளின் கோரிக்கையாகும்.


No comments:

Post a Comment