கரூரில்
உள்ள அட்லஸ் கலையரங்கம் அரங்கில் கொங்கு சகோதையா கூட்டமைப்பு பள்ளிகளின் திருவள்ளுவர்
மன்றங்கள் துவக்கி விழா நிகழ்ச்சியும், திருக்குறள் இயற்றிய திருவள்ளூவர் இளைஞர் திருவிழா
நடைபெற்றது. இந்நிகழ்வில் கரூர் , சேலம் , நாமக்கல், விழுப்புரம் , ஈரோடு உள்ளிட்ட சுமார் 150 க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ பள்ளிகளிலிருந்து
2500 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் திருவள்ளுவர் – வாசுகி, தந்தை பெரியா, இராணி
மங்கம்மாள், மகாகவி பாரதி, பாவேந்தர் பாரதிதாசன், விவேகானந்தர், ஜவகர்லால் நேரு, சத்ரபதி
சிவாஜி, வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல்வேறு தேசத்தலைவர்களின் வேடமணிந்து நூதனமான
முறையில் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் திருக்குறள் பேரவை செயலாளர்
மேலை.பழநியப்பன் திருக்குறளில் உள்ள 5 அதிகாரத்திலிருந்து 12 நிமிடம் 21 நொடிகளில்
50 திருக்குறளை வாசிக்க கூடியிருந்த அனைத்து மாணவ, மாணவிகளும் முற்றோதல் செய்து புதிய
உலக சாதனையாக நிகழ்த்தி சாதனை புத்தகத்தில் பதிவு செய்தனர். முன்னதாக இந்நிகழ்ச்சியில்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருவள்ளுவர் மாணவர் இளைஞர் மன்றங்களின் தேசிய தலைவரும்,
உத்திரகாண்ட் மாநில மாநிலங்களவை உறுப்பினருமான தருண் விஜய் தமிழகத்தில் 1 லட்சமும்,
மொத்தம் இந்தியாவில் 1 கோடி இலவச திருக்குறள்
புத்தக வினியோகத்தை வழங்கும் பொருட்டு, அதில் முதல் கட்டமாக கரூரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
2500 புத்தகங்கள் 2500 மாணவ – மாணவிகளுக்கு வழங்கி கரூரில் தொடங்கி வைத்தார். முன்னதா
திருக்குறள் நண்பரும், கரூர் திருக்குறள் பேரவை செயலாளருமான மேலை.பழநியப்பனை வாழ்த்தினார். மேலும் மேலை பழநியப்பனின்
சிறப்பு தொகுப்பு புத்தகங்களையும், குழந்தைகளுக்கு
தூய தமிழ் பெயர் இட கோரி அட்டைகள் தங்களது திருக்குறள் பேரவை செய்து வருவதாகவும் கூறினார்.
அதனை தருண் விஜயிடம் வழங்கி கொளரவித்தார்.
கொங்கு சகோதயா தலைவரும், கரூர் பரணி பார்க் பள்ளி முதன்மை முதல்வருமான டாக்டர்
இராமசுப்பிரமணியன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மேலும் மகாகவி பாரதியார், தந்தை
பெரியார், வீரபாண்டிய கட்டபொம்மன், ராணி மங்கம்மாள், சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட தேசிய
தலைவர்களின் உருவத்தை மாறுவேடமாக பள்ளி மாணவ, மாணவிகள் இட்டு ஆசிரியர்களையும், பெற்றோர்களையும்
மகிழ்வித்தனர். இந்நிகழ்வில் உலக சாதனை ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சின் புத்தக நடுவர்களான
புதுதில்லியிலிருந்து விவேக் நாயர் மற்றும் பாபுபாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர். கரூரில்
ஏற்கனவே 1515 மாணவ – மாணவிகள் பல்வேறு தேசிய தலைவர்களில் வேடமணிந்து நிகழ்வு இந்த சாதனை மூலம் முறியடிக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது. என்றார். இப்பொழுது இந்த சாதனை முறியடிக்கப்பட்டது என்றார். மேலும்
அப்துல் கலாமின் டிரீம் இண்டியா திட்டத்தை வரும் சில நாட்களில் தொடங்க உள்ளதாகவும்,
அதில் 1 கோடி இளைஞர்கள், மாணவ, மாணவிகள் மரங்களை நட்டு அப்துல் கலாமின் கனவை நனவாக்க
உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய தருண் விஜய் இந்திய
பிரதமர் மோடியின் ஓப்புதலோடு, இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் திருக்குறளில்
பாடப்புத்தகத்தில் சேர்க்க ஆணை பிறப்பித்துள்ளது. இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப்
முகர்ஜியிடம் தமிழை நீதிமன்ற மொழியாக்க கோரிக்கை விடுத்துள்ளேன். இமாசலப் பிரதேசம்
உத்திரகாண்ட் மாநிலத்தை சார்ந்த இந்தியை தாய் மொழியாக கொண்ட நான் ஏன் திருக்குறளையும்,
திருவள்ளுவரையும், தமிழையும் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன் என கேட்கிறார்கள். தொன்மையான
வரலாற்று சிறப்பு மிக்க பண்பாடு, கலாச்சாரத்தை போதிக்கிற மொழியாக தமிழ் மொழி உள்ளது.
எந்த ஒரு பிரச்சினைக்கும், தீர்வு தரக்கூடிய நூலாக திருக்குறளும், திருவள்ளுவரும் விளங்குகிறார்கள்
என்றார். மேலும் கண்ணகி, ஆண்டாள், இராஜ இராஜ சோழன் போன்ற சிறப்பு மிக்க வரலாறுகளும்
தமிழில் தான் உள்ளன. எனவே தமிழை போற்றும் போது பிற மாநிலங்களும் இதை அறிந்து கொள்ளும்
விதமாக இந்த பரப்புரை திகழ்கிறது. அப்துல் கலாம் அவர்களை நாம், பின்பற்றி அறிவை விரிவு
செய்ய படி, படி என படித்துக் கொண்டே இருக்க வேண்டும். பஞ்சாப், இமாசலப்பிரதேசம், மகாராஷ்ட்ரா
போன்ற பகுதி மக்களுக்கு திருவள்ளுவரையோ, திருக்குறளை பற்றி தெரிய வில்லை, இந்த அமைப்பு
இந்தியா முழுவதும், இதை கொண்டு செல்லும் என பேசிய தருண் விஜய், மாணவர்களை பார்த்து
எத்தனை பேர் ஆசிரியராக விரும்புகிறீர்கள் என்றும், விஞ்ஞானியாக எத்தனை பேர் விரும்புகிறீர்கள்
என்றும், விமான ஓட்டியாக எத்தனை பேர் விரும்புகிறீர்கள் என்றும், அரசியல் வாதிகளாக
எத்தனை பேர் மாற விரும்புகீறீர்கள் என கேட்டார். கை தூக்கிய மாணவர்களை நோக்கி, எந்த
துறையில் நீங்கள் வந்தாலும். நாடு உயரவும், சமூதாய மாற்றத்திற்கும் பாடு பட வேண்டுமென்றார்.
அதே போல மூன்று மாணவர்களை மேடைக்கு அழைத்து இந்தியாவில் தற்போதைய பெரிய பிரச்சினை எது
எனக்கேட்டார். முதல் மாணவன் ஊழல் என பதில் அளித்தார். இதை தவிர்க்க உன்னுடைய யோசனை
என்ன எனக் கேட்டார். மாணவன் மக்களும், தலைவர்களும் மனமாற வேண்டும் என பதில் அளித்தார்.
அவரை பாராட்டிய தருண் விஜய், அடுத்த மாணவரிடம் கேட்ட போது இந்திய தூய்மையற்று இருக்கிறது
என பதில் அளித்தார். தீர்வு எனக் கேட்ட போது, ஓவ்வொருவரும் உணர்ந்து செயல்பட்டால் தூய்மையை
பராமரிகலாம் என பதில் அளித்தார். அவனை பாராட்டிய தருண் விஜய், மூன்றாவது மாணவரிடம்
கருத்து கேட்டார். அவன் இயற்கை பேணா மை என பதில் அளித்தார். தீர்வு என கேட்ட போது மரக்கன்றுகளை
நட்டு கிரின் சிட்டி ஆக்க வேண்டுமென பதில் அளித்தார். அந்த மாணவரை பாராட்டிய தருண்
விஜய் கரப்ஷன், கிளீன், கிரீன் இவற்றை குறிக்கோளாக கொண்டு பெற்றோர்களையும், நாட்டையும்,
ஆசிரியர்களையும், மதித்து நல்ல தேர்ச்சி பெற வேண்டியது மாணவர்களின் கடமை என்றார். இந்நிகழ்ச்சியின்
முன்னதாக மறைந்த மக்களின் குடியரசுத்தலைவரின் படத்தை திறந்து வைத்து இந்நிகழ்ச்சியில்
அமைதி வழிபாடு நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கரூர் பரணி பார்க் பள்ளிக் குழுமங்களின்
தலைவர் மோகனரெங்கன், செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், வள்ளுவர் குழுமங்களின் தலைவர்
செங்குட்டுவன், சேரன் பள்ளி முதல்வர் வி.பழநியப்பன், புலவர் பார்த்தசாரதி, ஆர்.எஸ்.எஸ்.குணசேகரன்,
மோகன், கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி தலைவர் கே.சிவசாமி மற்றும் நிர்வாகிகள் கைலாசம்,
பரணி பார்க் பள்ளி குழுமங்களின் நிர்வாக அலுவலர் சுரேஷ், இலாலாபேட்டை சரஸ்வதி வித்யாலாய
பள்ளி தண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிகழ்ச்சியில்
அனைத்து மாணவருக்கும் திருக்குறள் நூல்களும், தேசிய கொடியும், ஓலைச்சுவடிகளும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment