Friday, 7 August 2015

செந்தில் பாலாஜியை மிஞ்சும் செந்தில் நாதன் – அதிமுக வில் அதிரடி 50 மாதமாக அம்மா பெயரில் தனது சம்பளத் தொகையை கொடுக்கும் எம்.எல்.ஏ வுக்கு மாவட்ட செயலாளர் பதவியா ? வாட்ஸ் அப்பில் வலம் வரும் எம்.எல்.ஏ – ஜாதி வித்யாசமில்லாமல் நடத்தும் ஒரே இயக்கம் அ.தி.மு.க மட்டும் தான் அ.தி.மு.க வினர் புகழாரம்

வருங்கால தமிழக முதல்வர் என்ற பெயரை பெற்ற ஒரே ஒரு பெயரை பெற்றதால் போயஸ் கார்டனில் இருந்து ஓரங்கட்டப்பட்ட செந்தில் பாலாஜியின் கட்சி பதவியும், தமிழக போக்குவரத்து பதவியும் பறிக்கப்பட்டதன் காரணம் என்ன என ஆராய்ந்தால் மண்டை குளம்பும் அளவிற்கு அடுக்கடுக்கான புகார்கள் செந்தில் பாலாஜி மீது குவிந்தது. இதில் முக்கிய காரணம் என்ன என்றால் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை மதிக்காதது, அம்மா பேரவை செயலாளரும், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ எஸ்.காமராஜை அழைக்காதது தான் முதல் காரணம் என்கின்றனர் மற்ற நிர்வாகிகள். இந்நிலையில் மெட்ரோ ரயிலில் இருந்து ஓரங்கட்டப்பட்ட செந்தில் பாலாஜியின் பதவி அடுத்த 10 நாட்களில் பறிக்கப்பட்டது. கடந்த 27 ம் தேதி போயஸ் கார்டன் வட்டாரம் அவர் பதவி பறிக்கப்பட்டது என்ற செய்தி கேள்விப்பட்டவுடன் கவலை பட்டது கரூர் மாவட்ட தி.மு.க தான். அ.தி.மு.க வை விட அதிக கவலை தி.மு.க என்றால் அது மிகையாகாது ஏனென்றால் மணல் கொள்ளை, போக்குவரத்து பிரச்சினை, அ.தி.மு.க அதிலும் என்னை கண்டித்து எதுவும் பேசக்கூடாது என ஒரு பல்க் தொகை கொடுக்கப்பட்டு வந்தது. அப்போதைய வேட்பாளரும், தற்போதைய மக்களவை துணை சபநாயகருமான தம்பித்துரை எப்போது ஓட்டு கேட்டாலும் கே.சி.பி என்கிற ஜே.சி.பி என்கின்ற வார்த்தை வந்தது. இந்த ஒட்டு மொத்த வெற்றியில் தனது பங்கில் நடக்கும் மணல் கொள்ளைக்கு எனக்கே (அதாவது தம்பித்துரைக்கே) பணம் கொடுக்கப்பட்டதாக தகவல் தெரிய உடனே தம்பித்துரை உடனே பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விடு இல்லையென்றால் போலீஸை கூப்பிடுவேன் என்றெல்லாம் திட்டி அனுப்பியுள்ளார்.
இப்படி இருக்க தற்போது கரூர் மாவட்ட பொறுப்பாளர் தங்கமணிக்கு பொறுப்பு கிடைத்தவுடன் மாமாவிற்கு தானே என்கிற வண்ணம் அமைதியாக சிரித்து முகமாக இன்னும் அ.தி.மு.க வில் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் கலந்து கொள்வதோடு சென்னை பக்கமே செல்லாமல் இருக்கிறார் முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி.
இது ஒரு புறம் இருக்க செந்தில் நாதன் அதாவது,  முன்னாள் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் செந்தில் நாதன் தன்னுடைய சொந்த பணத்தை கட்சியில் (அ.தி.மு.க வில்) போட்டுருக்கிறோம். சுமார் ரூ 12 கோடிக்கு மேல் பணத்தை அ.தி.மு.க வின் கட்சிக்காக செலவழித்துள்ளோம் எப்படியாவது, அம்மாவிடம் நல்ல பெயர் வாங்கி கரூர் மாவட்ட செயலாளர் பதவியை பிடித்தே ஆக வேண்டுமென்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அப்படி ஒரு புறம் இருக்க முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி தற்போது நடைபெற்ற கரூர் மாவட்ட செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்திற்கு செலவு செய்தாலும், பெயர் தட்டிக் கொண்டு போனது செந்தில் பாலாஜியின் மாமா தங்கமணி தான் இருப்பினும் எனது வேலை உண்டு என்ற பாணியில் மேடையில் அமர்ந்திருந்த செந்தில் பாலாஜியின் பேச்சிற்கு கை தட்டல் இந்தப்புறம் 20 பேர், இந்தப்புறம் 20 பேர் என்கின்ற பாணியில் அம்மா பெயர் சொன்னதற்கு கூட கைதட்டல் இல்லை, முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜியின் பெயரை சொன்னதற்கு கைதட்டல் என்றால் பாருங்களேன். அப்படி அதற்கென நாடோடிகள் படத்தில் வருவது போல இதற்கென 14 பேர் கொண்ட கும்பல் வைத்து செந்தில் பாலாஜி செயல்படுவது அப்படத்தில் வருவது போல. பிளக்ஸ் வைத்து கை தட்டல் தட்டுவதற்கு ஒரு குரூப் என தனித்தனி.
இப்படியிருக்க கரூர் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட நிதியமைச்சரும், கழக பொருளாளருமான ஓ.பன்னீர் செல்வம் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ஏனென்றால் அமைச்சரால் பாதிக்கப்பட்ட மற்றும் கட்சியில் இருந்த மூத்த நிர்வாகிகள் எல்லோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்றால் அது போயஸ் கார்டன் வரை செல்ல உடனே செந்தில் நாதனுக்கு தான் மாவட்ட செயலாளர் பதவி என நள்ளிரவு தகவல் வெளியானது, ஜெயலலிதா அவர்களின் தோழி சசிகலா சிபாரிசுவில் கட்சியில் இணைந்த செந்தில் நாதனுக்கு உடனே மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை பொறுப்பு என்றால் அந்த அளவிற்கு கவனிப்பு. செந்தில் நாதன் ஒரு கிரானைட் வியாபாரி, மேலும் கோடீஸ்வரன் ஆனால் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ கே.சி.பழனிச்சாமியும், அப்போதைய அ.தி.மு.க மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜியை பழி வாங்க வேண்டுமென்பது இவரது தலையாய நோக்கம் ஆகும். இந்நிலையில் ஏற்கனவே செந்தில் பாலாஜி மாவட்ட செயலாளர் ஆக இருக்கும் போதே நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிட்டார். அதே போல அம்மாவிற்காக எதாவது ஒரு செயலை செந்தில் பாலாஜி செய்தால் அதையே காப்பி அடித்து அதே (உதாரணத்திற்காக ) கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் காலை அம்மாவிற்காக அன்னதான நிகழ்ச்சியை செந்தில் பாலாஜி செய்ய, அதையே காப்பி அடித்து மதியம் அதே போல அம்மாவிற்கு அன்னதானம் கொடுத்தார். மேலும் இவரும் கழக மூத்த நிர்வாகிகளை மதிக்க மாட்டார். செல் போனும் எடுக்க மாட்டார். தனியே தன்னந்தனியே என்றவாறு செய்தார். இப்போதும் அது போலவே செய்தார். இன்னமும் செய்து வந்தார். ஆதனால் அ.தி.மு,க வில் ஓரங்கட்டப்பட்ட செந்தில் நாதனுக்கு அப்பதவியும் பறிக்கப்பட்டது.
எது எப்படியோ எதையும் காப்பியடிக்காமல் விளம்பர பிரியர் இல்லாமல் கரூர் மாவட்டத்தில் வலம் வந்தவர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எம்.எல்.ஏ காமராஜ் தான், இவர் அம்மா பேரவை செயலாளர் என்பதால், கழக நிகழ்ச்சிக்கு கூப்பிட்டாலும், கூப்பிடா விட்டாலும் தான் ஓவ்வொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வார். என்ன அண்ணா தங்கள் பெயர் இதில் இடம்பெற வில்லையே என்றால் பிரிண்டிங் மிஸ்டேக் ஆகி இருக்கும் அம்மாவிற்காக ஏற்பாடு செய்யப்படும் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் நான் கலந்து கொள்வேன் என கட்சியில் தனக்கு மரியாதை அளிக்கப்படாமல் இருந்தாலும் அதை மற்றவர்களுக்கு தெரிய படுத்தாமல் அமைதியாகவே இருப்பார். உதாரணத்திற்கு மாவட்ட கழக சார்பில் நடத்தப்படும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தனது பெயர் இடம்பெற வில்லை என்பதை கழகத்திற்கு கூட சொல்ல மாட்டார் ஏனென்றால் அம்மா மனது புண்படுமே என்று. இது வரை 50 மாத சம்பளத்தொகையை எந்த வித ஆடம்பர இல்லாமல், விளம்பரம் செய்யாமல் கொடுத்து வந்த எம்.எல்.ஏ எஸ்.காமராஜை இன்றும் கேட்டால் இது எனது பணம் இல்லை, அம்மா எனக்கு சம்பளமாக கொடுத்த பணம், இப்பணம் ஏழை எளிய மக்களுக்கு எதாவது தானம் செய்வது எனது பாக்கியம் என்று கூறி வந்தார். எம்.எல்.ஏ அண்ணா என்று சொன்னால் கூட முதலில் நான் அ.தி.மு.க தொண்டர் என்று சொல்லி உடனே அம்மா புராணத்தை பாடி வந்தவர். ஏன் அவர் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார் என்ற காரணம் இது வரை அவருக்கே தெரியவில்லை. காரணம் ஜாதி பெயரால் தான் என்கின்றனர். உண்மையான அ.தி.மு.க நிர்வாகிகள் மேலும் ஜெயா டி.வி யில் கூட அம்மா பேரவை செய்திகள் வெளி வராமல் செய்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இப்படி இருக்க இவருக்கு என இவரது ஆதரவாளர்கள் குயின் டி.வி என்று ஆரம்பித்து எல்லா நிகழ்ச்சிகளையும், அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியின் செய்திகளில் இருந்து முதல்வர் அம்மா செய்திகள் வரையும், அரசு செய்திகள் கூட. இப்படி இருந்த குயின் டி.வி மக்களிடையே வரவேற்பு பெற்ற நிலையில், அப்போதைய அமைச்சர் டி.வியான ஜெயம் டி.வி யின் மேற்பார்வையாளர் ஜெயம் மூர்த்தி அந்த டி.வி க்கும் பூட்டு போட்டார். ஓரிரு தினங்களுக்கு முன்னர் கரூரில் நடைபெற்ற அ.தி.மு.க வின் செயல் வீரர்கள் கூட்டத்திற்கு செலவுகள் எல்லாம் செந்தில் பாலாஜி ஆக இருந்தாலும், எம்.எல்.ஏ காமராஜிற்காக தான் நாங்கள் வந்தோம் என்றனர் உண்மையான அ.தி.மு.க நிர்வாகிகள்.
இந்நிலையில் போயஸ் வட்டாரத்தின் பார்வையிலே இருக்கும் செந்தில் நாதன் எப்போது வேண்டுமென்றாலும் மாவட்ட செயலாளர் பதவி அறிவிக்கப்படும் என்று அவரது ஆதரவாளர்கள் ஒரு புறம் இருக்க, ஏற்கனவே செந்தில் பாலாஜி பிரச்சினை இப்போது தான் தீர்ந்தது அதே பாணியை கடைபிடிக்கும் செந்தில் நாதன் தேவை தானா என அ.தி.மு.க பொது செயலாளர் நினைப்பாதாகவும், ஜாதி அரசியல் கட்சி இல்லாமல் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த அம்மா பேரவை செயலாளரும், எம்.எல்.ஏ வுமான எஸ்.காமராஜ் மாவட்ட செயலாளராக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக உண்மையான அ.தி.மு.க வினர் கூறி வருவதோடு வாட்ஸ் அப்பில் தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்து எம்.எல்.ஏ வும், அம்மா பேரவை செயலாளருமான எஸ்.காமராஜீடம் கேட்ட போது., இந்த எம்.எல்.ஏ சீட் எனக்கு அம்மா கொடுத்த வரம், சாதாரண தொண்டனாக இருந்த என்னை அம்மா இனாம் கரூர் நகராட்சி கவுன்சிலராக ஆக்கினார். இப்போது எம்.எல்.ஏ வும், அ.தி.மு.க அம்மா பேரவை செயலாளருமாக ஆக்கி உள்ளார். யார் மாவட்ட செயலாளர் என்பதை அம்மா அறிவிப்பார். அவருக்கு என்றுமே நாங்கள் உழைப்பதே எங்களது வேலை என்றார்.
அம்மா பதவி பறிக்கப்பட்ட பின்னர் தினந்தோறும் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் என ஆரவாரம் இல்லாமல் செய்தி கூட இல்லாமல் அம்மாவிற்காக சிறப்பு பீரார்த்தனை செய்ததோடு, ஒரு வேளை உணவருந்தாமல் இருந்து வந்ததாக அவரின் வீட்டு சமையல் காரம்மா கூட சொல்கிறார் என்றால் பாருங்களேன். தலையில் மொட்டை போட்டதோடு, அம்மாவிற்காக அங்கப்பிரதட்சணம், மண்சோறு சாபிட்டு என எல்லாம் அம்மாவின் நலத்திற்காக செய்த இவரை பத்திரிக்கையாளர்கள் ஒரு சிலர் கூட உதாசினப்படுத்தினார்கள் என்றால் அது மிகையாகது. காரணம் கட்சியில் நல்ல பெயர் வாங்கி விடுவார் என்பதற்கு அந்த செய்தியும் வெளியிடாமல் முன்னாள் மாவட்ட செயலாளரின் விசுவாசிகள் ஆக இருந்தனர். தற்போது மதில் மேல் பூனை போல் உள்ள இந்த மாவட்ட செயலாளர் பதவி யாருக்கு என்றால் முதல்வரும், அ.தி.மு.க பொது செயலாளருமான ஜெயா அம்மா விற்கு தெரியும் என ஒரு புறம் இரத்ததின் இரத்தங்கள், கருத மூத்த நிர்வாகிகளை மதிக்கும் குணம் கொண்டவரை சீக்கிரம் அறிவிப்பார் என்கின்றனர் உண்மையான அ.தி.மு.க வினர்.

மேலும் இதற்கு முன்னாள் மாவட்ட செயலாளராக பணியாற்றிய சாகுல் அமீது அவர் பொறுப்பேற்ற நாள் முதல் கழக பணிகளை எவ்வித இடையூறும் இல்லாமல் செய்து வந்தார். இஸ்லாமியர் சமூகத்தை சார்ந்த அவருக்கே அம்மா மாவட்ட செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் அவர் ஏன் அம்மா பேரவை செயலாளருக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்க மாட்டார் என்பது அனைவரின் ஒருமொத்த கருத்தாகும்






No comments:

Post a Comment