கரூர் மாவட்ட மறுமலர்ச்சி
தி.மு.க அலுவலகமான தாயகத்தில் கரூர் மாவட்ட கழக செயலாளர் பரணி.மணி தலைமையில் வரும்
4 ம் தேதி சாராயக்கடைக்கு எதிராக நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தையடுத்து ஆலோசனைக்
கூட்டம் நடைபெற்றது. அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் சீனீவாசப்பெருமாள் முன்னிலை வகித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாநில ம.தி.மு.க இளைஞரணி
செயலாளர் பொறியாளர் வே.ஈஸ்வரன் கலிங்கப்பட்டியில் மதுவிற்கு எதிராக அமைதியாக நடைபெற்ற
போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில்
ம.தி.மு.க மாவட்டப் பொருளாளர் ஆர்த்தியா பொன்னுசாமி, துணை செயலாளர் திருவை.வி.பி.கேசவன்,
மாவட்ட இளைஞரணி செயலாளர் அருள்முருகன், துணை செயலாளர் சிபி ராஜ், மாணவரணி செயலாளர்
பி.ஆர்.பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் அரவக்குறிச்சி கலையரசன், தாந்தோன்றி கபினி சிதம்பரம்,
க.பரமத்தி கரியாம்பட்டி இளங்கோ, கிருஷ்ணராயபுரம் தமிழ்ச்செல்வன், சங்கப்பிள்ளை, கரூர்
நகர செயலாளர் என்.பி.கே.பாலமுருகன், இனாம் கரூர் நகர செயலாளர் அம்மன் தங்கராஜ் மாநில
அணி நிர்வாகிகள் இலக்கிய அணி துணை செயலாளர் பொத்தனூர் ஈழபாரதி, இளைஞரணி துணை செயலாளர்
ஆசை சிவா, மாவட்ட தொண்டரணி செயலாளர்கள் முத்துராஜ், கண்ணன், மாரிமுத்து, மாவட்ட மகளிரணி
செயலாளர் பாப்பாத்தி குமரேஷன், சிறுபான்மை பிரிவு செயலாளர் எஸ்.அமிருதீன், தாந்தோன்றி
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரவிக்குமார் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர்
நகர செயலாளர் நேதாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனீஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கந்தசாமி,
நகர செயலாளர் ஜோதிபாசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அக்னி.இல.அகரமுத்து,
அக்கட்சியின் மாநில துணை செயலாளர் துரை செந்தில், மாவட்ட துணை அமைப்பாளர் அரசு தமிழ்மணி
உள்பட பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு வரும் 3 ம் தேதி மாலைக்குள் கரூர் மாவட்டத்தில்
உள்ள வணிகர்கள், பொதுமக்களுக்கு நமது கடையடைப்பின் அவசியத்தை எடுத்துக்கூறவும் தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன. மதுவால் இளைய சமுதாயம் சீரழிந்து வருவதை எடுத்துக் காட்டி நாளைய
சமுதாயம் நலமுடன் வாழ வேண்டுமானால் அரசின் சாராயக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டுமென
கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் 3 வயது சிறு குழந்தைக்கு மது ஊற்றி கொடுக்கும் வேதனையான
சம்பவமும் தமிழகத்தில் இந்த மதுக்கடைகளால் தான் உருவாகிறது என்பதை சுட்டிக் காண்பிக்கப்பட்டது.
இதே போல் அரவக்குறிச்சி
பகுதியில் அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்
கலிங்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனத்தை பதிந்த அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கலையரசன்,
அறவழி போராட்டத்தினால் தான் இந்த தடியடி என்ற நினைப்பை தமிழக அரசு எங்களுக்கு ஊட்டுவதாகவும்
எச்சரிக்கை தெரிவித்தார்.
No comments:
Post a Comment