தமிழகத்தை மதுவினால்
மூழ்கடித்துள்ள தமிழக அரசின் அவல நிலையை சுட்டி காட்டி அவ்வப்போது ம.தி.மு.க பொதுச்
செயலாளர் வை.கோ நடைபயணம், மாரத்தான், கட்டுரைப்போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு அறவழிப்போராட்டங்கள்
நடத்தி வருகிறார். இந்நிலையில் காந்தியவாதியான சசிபெருமாளின் மரணத்திற்கு முறையான நீதி
விசாரணை வேண்டியும், ஆகஸ்ட் 4 ம் தேதி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும்
மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோவும், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள்
கட்சி, இந்திய கம்யூனிஸ் கட்சி, மார்க்சீஸ்ட் கம்யூனீஸ்ட் கட்சியினர் நடத்த உள்ள வேலை
நிறுத்தத்திற்கு வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தந்துள்ளனர். இந்நிலையில்
கரூரில் கரூர் மாவட்ட ம.தி.மு.க செயலாளர் பரணி மணி தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் நகர செயலாளர்
நேதாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனீஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கந்தசாமி, நகர செயலாளர்
ஜோதிபாசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அக்னி.இல.அகரமுத்து, அக்கட்சியின்
மாநில துணை செயலாளர் துரை செந்தில், மாவட்ட துணை அமைப்பாளர் அரசு தமிழ்மணி உள்பட ம.தி.மு.க
நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினர். இதே போல கரூர் பேருந்து
நிலையத்தில் கரூர் நகர ம.தி.மு.க செயலாளர் என்.பி.கே.பாலமுருகன் தலைமையிலும், அரவக்குறிச்சி
பகுதிகளில் அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கோ.கலையரசன் தலைமையிலும் ஏராளமான கட்சியினர்
துண்டு பிரசுரங்கள் கொடுத்து கடையடைப்பிற்கு ஆதரவு திரட்டினர்
No comments:
Post a Comment