Sunday, 2 August 2015

ஈரோட்டில் வரும் 8 ம் தேதி நடைபெறும் திராவிட இயக்கத்தைப் பற்றிய கருத்துப்பட்டறைக்கு ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் தற்போதே தயார் – கரூரில் ம.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் பேட்டி - கலிங்கப்பட்டியில் நடைபெற்ற போலீஸ் தடியடிக்கு கண்டனம்

கரூர் மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க அலுவலகமான தாயகத்தில் கரூர் மாவட்ட கழக செயலாளர் பரணி.மணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் சீனீவாசப்பெருமாள் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாநில ம.தி.மு.க இளைஞரணி செயலாளர் பொறியாளர் வே.ஈஸ்வரன் வரும் 8 ம் தேதி மற்றும் 9 ம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ள திராவிட இயக்கத்தின் கருத்துப் பட்டறைக்கு கரூர் மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும்  மாணவரணியினர் தற்போதே தயராகி உள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் ம.தி.மு.க உதயமாகி இது வரை தமிழர்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியதாகவும், இனியும் நடத்துமெனவும், பொதுச் செயலாளர் வை.கோ வின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்று கூட வேண்டும் என்றார். மேலும் இந்நிகழ்ச்சியில் ம.தி.மு.க மாவட்டப் பொருளாளர் ஆர்த்தியா பொன்னுசாமி, துணை செயலாளர் திருவை.வி.பி.கேசவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அருள்முருகன், துணை செயலாளர் சிபி ராஜ், மாணவரணி செயலாளர் பி.ஆர்.பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் அரவக்குறிச்சி கலையரசன், தாந்தோன்றி கபினி சிதம்பரம், க.பரமத்தி கரியாம்பட்டி இளங்கோ, கிருஷ்ணராயபுரம் தமிழ்ச்செல்வன், சங்கப்பிள்ளை, கரூர் நகர செயலாளர் என்.பி.கே.பாலமுருகன், இனாம் கரூர் நகர செயலாளர் அம்மன் தங்கராஜ் மாநில அணி நிர்வாகிகள் இலக்கிய அணி துணை செயலாளர் பொத்தனூர் ஈழபாரதி, இளைஞரணி துணை செயலாளர் ஆசை சிவா, மாவட்ட தொண்டரணி செயலாளர்கள் முத்துராஜ், கண்ணன், மாரிமுத்து, மாவட்ட மகளிரணி செயலாளர் பாப்பாத்தி குமரேஷன், சிறுபான்மை பிரிவு செயலாளர் எஸ்.அமிருதீன், தாந்தோன்றி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்

பேட்டி : வே.ஈஸ்வரன் – மாநில இளைஞரணி செயலாளர் – ம.தி.மு.க

No comments:

Post a Comment