விஸ்வரூபமெடுக்கிறது
மணல் பிரச்சினை – மணல் அள்ளுவதை தடை செய்யக்கோரி ஒரு புறம் மனு கொடுத்து வரும் நிலையில்
– மணல் அள்ளுவதில் எங்களுக்கு முன்னுரிமை வேண்டுமென கோரி கரூர் அருகே மணல் அள்ளும்
லோடுமேன்கள் தீடீரென மணல் மறுவிற்பனை நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
தமிழகத்தில் கனிம
வளக் கொள்ளை ஒரு புறம் இருக்க, தாது, மணல் கொள்ளை என்பது பசுமைத் தீர்ப்பாயம், உச்சநீதிமன்ற
தீர்ப்பையும் மீறி நடைபெற்று தான் வருகிறது. இதற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு கரூர்
மாவட்டம் ஆகும். மணல் எடுக்க தடை செய்ய வேண்டுமென கூறி அவ்வப்போது மணல் லாரிகளை சிறைபிடித்து,
மணலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் நிலையில் கரூர் அருகே லாலாபேட்டையில், மணல்
அள்ளுவதி எங்களுக்கு முன்னுரிமை வேண்டுமென கூறி மணல் மறு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டதால்
பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த இலாலாபேட்டை
பகுதியில் அமைந்துள்ளது சிந்தலவாடி கிராமம், இக்கிராமத்தில் மணல் மறுவிற்பனை நிலையத்தை
நடத்தி வருகின்றனர். இங்கு மணல் நிரப்பும் லோடு மேன்கள், உள்ளூர் காரர்களுக்கு கொடுத்து
வந்த நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக வெளியூர் காரர்களுக்கு வேலை தந்து வருவதாக
குற்றம் சாட்டி அங்கிருந்த மணல் மறுவிற்பனை நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதி
மக்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்நிலையில்
போலீஸார் வந்து சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போது, போலீஸாரையும் சிறைபிடித்த அப்பகுதி
மக்கள், மணல் லாரிகளையும், பொக்லீன் இயந்திரங்களையும் சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில்
பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment