சுதந்திர தினவிழா அன்று மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதையும் மீறி சுதந்திர தினத்தன்று ஸ்ரீ பெரும்புதூரில் மது விற்பனை செய்வதற்காக ரூ 96ஆயிரம் மதிப்புள்ள 960 மதுபாட்டில்கள் பதுக்கிய இருவரை அப்போலீஸார் போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள இருங்காட்டுக்கோட்டை பகதியில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. இதன் அருகிலேயே அரசு அனுமதி பெற்ற பார் இயங்கி வருகிறது. இதில் மாநக்கல் பகுதியை சேர்ந்த சரவணன்(38), சேலம் பகுதியை சேர்ந்த பிரகாஷ்(34) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தி மதுபானத்தை அதிகவிலைக்கு விற்பதற்காக சரவணன், பிரகாஷ் ஆகியோர் சுமார் ரூ 96 ஆயிரம் மதிப்புள்ள 960 மதுபாட்டில்களை பாரில் பதுக்கியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சென்று பதுக்கிவைக்கப்பட்ட 960 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து சரவணன், பிரகாஷ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment