Sunday 9 August 2015

ஈழ தமிழர்கள் பற்றி மோடியும், ஜெயலலிதாவும் என்ன பேசினார்கள் என்பதை வெளியுலகுக்கு தெரிய படுத்த வேண்டும் வைகோ

ஈரோடு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் திராவிட இயக்க கருத்து பட்டறை என்னும் நிகழ்ச்சி ஈரோட்டில் நேற்றும், இன்றும் நடைபெற்று வருகிறது
இதில் ஈரோடு, கோவை மாநகர்- புறநகர், திருப்பூர், கரூர், நாமக்கல் , நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 300 பேர் கலந்து கொண்டனர்.
இதில் ஈரோடு மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி தலைமை தாங்கினார்.
.
முன்னதாக அவர் நிருபர் களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறிய தாவது:-
ஈரோட்டில் இன்றும், நாளையும் நடக்கும் திராவிட இயக்க கருத்து பட்டறையில் இளைஞரணி, மாணவரணி, தொண்டரணியை சேர்ந்த 300 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
திராவிட இயக்க கருத்து பட்டறைக்கு வித்திட்டவர் தந்தை பெரியார். 1928-ல் ஈரோடு ரெயில் நிலையம் அருகில் சுய மரியாதை பிரசார போதனை கூடத்தை அவர் நடத்தினார். அப்போது இருந்ததை விட இப்போது 1000 மடங்கு போதனை தேவைப்படுகிறது. மூட நம்பிக்கை, ஒழுக்கக்கேடு, பண்ப£டு அழிவு போன்றவற்றால் தமிழகம் சீரழிந்து வருகிறது. எனவே இதிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும்.
மதுவின் கோரப்பிடியில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும். காந்தியவாதி சசிபெருமாள் படிபடியாக தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வர போராடினார். ஆனால் அவரை கொன்று விட்டார்கள். வருகிற 15-ந் தேதி முதல் முதல் கட்டமாக தமிழகத்தில் மதுகடைகளின் நேரம் மாற்றி அமைக்கப்படும் என்றும் பள்ளி-கல்லூரிகள், ஆலயங்கள் அருகில் மதுக்கடைகள்-பார்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்படும் என்றும் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவிக்க உள்ளார்.
இதுபற்றி ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டது. இதை ஏன் அப்போதே தமிழக அரசு செய்யவில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு தான் ஞானோதயம் ஏற்பட் டதா?
மதுக்கடைகளின் நேரம் குறைக்கப் படுவதால் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மதுவை வாங்கும் நிலை தான் ஏற்படும். எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா ஆரோக்கியமாக பழைய மிடுக்கோடு வருகிறார் என்பது சந்தோஷமான விஷயம். இதற்கு நான் பெருமைப்படுகிறேன். பிரதமர் மோடி நேற்று சென்னைக்கு வந்த போது அவரை காத்திருந்து ஜெயலலிதா வரவேற்றுள்ளார். மேலும் அவருக்கு உணவு பரிமாறி உள்ளார். இது தமிழ் பண்பாடு. இதை வரவேற்று பெருமைப்படுகிறேன்.
ஆனால் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறுதி சடங்கில் அவர் ஏன் கலந்து கொள்ளவில்லை? மதுரை வரை வந் தாவது கலாம் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி இருக்கலாமே? அப்போது அவரது உடல் நிலை சரியில்லை என்று கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது. ஈழ தமிழர்களை பற்றி மோடியும், ஜெயலலிதாவும் என்ன பேசினார்கள் என்பதை வெளியுலகுக்கு தெரிய படுத்த வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறினார்.

No comments:

Post a Comment