இந்திய பிரதமர்
மோடியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சந்திப்பை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொச்சைப்படுத்தி பேசியதை
அடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க மற்றும்
பாரதீய ஜனதா கட்சிகள் ஆர்பாட்டம், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு
வருகின்றனர். இதில் அ.தி.மு.க வினர் மட்டும் தொடர் போராட்டமாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை
கண்டித்து தினந்தோறும் போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ்
கமிட்டியின் இளைஞரணி தலைவர் எம்.யுவராஜ் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி குஷ்பு காங்கிரஸ்
கட்சியாகி உள்ளது என்று கரூரில் பேட்டியளித்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ்
கட்சியின் வரும் 25 ம் தேதி கரூரில் மாநில இளைஞரணி கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்
தலைமையில் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழ்
மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி.கே.வாசன் வருகையை யொட்டி கட்சி நிர்வாகிகளிடம் இளைஞரணி
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. அப்போது தமிழ்
மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.,
அப்போது., தமிழகத்தில் ஏற்கனவே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில்
கையெழுத்து இயக்கம் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி வருகிறது. இதில் இளைஞரணி சார்பில்
வரும் 26, 27, 28 ஆகிய மூன்று தினங்கள் தமிழகத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான
திரையரங்கு, வணிக வளாகம், கல்லூரி உள்ளிட்ட ஏராளமான இடங்களில் தொடங்க உள்ளது. மேலும்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிரதமர் மோடியையும், தமிழக முதல்வர்
ஜெயலலிதாவையும் கொச்சைபடுத்தி பேசியதை கண்டித்து அவர்கள் கட்சியினரே வாய் பேச முடியாமல்
உள்ளனர் என்பதை சுட்டிக் காட்டிய யுவராஜா, ஏன் இதை பற்றி கே.வி.தங்கபாலு, பா.சிதம்பரம்,
திருநாவுக்கரசு உள்ளிட்ட அவரது கட்சியினரே மொளன மாக தான் உள்ளனர். குஷ்பு மட்டும் தான்
பேசி வருவதாக கூறிய அவர் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியானது குஷ்பு காங்கிரஸ் கட்சியாக
செயல்பட்டு வருகிறது என்றார். மேலும் வரும் காவிரி நீரானது விவசாயிகளுக்கு மட்டுமில்லாமல்
தமிழகத்தில் வாழும் மக்களின் 80 சதவிகித குடிநீர் ஆதாரங்களை உள்ளடக்கியது. ஆகையால்
காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு அணையை கட்டியே தீருவேன் என்ற மத்திய அமைச்சர் சதானந்த
கவுடாவை தமிழகத்திற்குள் கால் வைக்க விட மாட்டோம். இதை தமிழக பா.ஜ.க வும் தடுக்க வேண்டும் ஏனென்றால் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினை
ஆகும் என்றார். காவிரி டெல்டா பகுதிகளில் காவிரியின் உரிமையை மீட்க வலியுறுத்தி மிக
விரைவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நடத்த உள்ளதாகவும், தேதி
எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பார் என தெரிவித்தார். பேட்டியின் போது
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் எம்.இராஜேஷ், மாவட்ட
தலைவர்கள் (மேற்கு) ஸ்டீபன் பாபு, (கிழக்கு) ஸ்கை யுவராஜா உள்ளிட்டோர் இருந்தனர்.
பேட்டி : யுவராஜா
– இளைஞரணி தலைவர் – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி
No comments:
Post a Comment