பிரதமரான பிறகு அரசு விழாவில் பங்கேற்க முதன்முறையாக இன்று சென்னை வந்தார் மோடி -சென்னை வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ரோசையா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர்
விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றனர்.
மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கைத்தறி நெசவாளர்கள் விழா,
முதல் முறையாக சென்னையில் இன்று நடைபெறுகிறது. சென்னை பல்கலைக்கழக
நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி
கலந்து கொள்கிறார்.
இதற்காக அவர் இன்று காலை 7.45 மணிக்கு டெல்லியில் இருந்து தனி
விமானத்தில் சென்னை புறப்பட்டார் பிரதமர் மோடி காலை 10.30 மணிக்கு
மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் நரேந்திரமோடியை பொன்னாடை
போர்த்தி மலர் கொத்து வரவேற்றார். தமிழக கவர்னர் கே.ரோசய்யா பூங்கொத்து
கொடுத்து வரவேற்றார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,
உள்ளிட்டோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். முக்கிய பிரமுகர்களும்
மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது. முதல்வர், பிரதமர் வருகையை முன்னிட்டு விமான நிலையம்
பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
No comments:
Post a Comment