கரூர் நகராட்சியின்
சாதாரண கூட்டம் கடந்த 30 ம் தேதி காலை கரூர் நகராட்சி கூட்ட அரங்கில் அதிமுக வை சார்ந்த
நகர்மன்றத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற இருந்தது. ஆனால் 48 கவுன்சிலர்கள் உள்ள
நகராட்சியில் 37 கவுன்சிலர்கள் ஆளுகின்ற அ.தி.மு.க வை சார்ந்த கவுன்சிலர்கள் ஆவார்.
அவர்கள் அனைவரும் அன்று கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இந்த கூட்டத்தில் நகர்மன்ற
தலைவரும், மற்ற எதிர்கட்சிகளான தே.மு.தி.க, தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, த.மா.கா
உள்ளிட்ட கட்சி கவுன்சிலர்கள் 11 பேர் மட்டுமே கூட்ட அரங்கின் முன் திரண்டனர். மேலும்
அங்கு வந்த நகர்மன்ற தலைவர் செல்வராஜ் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறி சென்றார்.
அ.தி.மு.க கவுன்சிலர்கள் தங்களுக்கு உள்ள கமிஷன் பிரச்சினையை மட்டுமே மையக்கருத்தாக
கொண்டு கலந்து கொள்ள வில்லை என்று அன்றே கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். இந்த
சம்பவம் அ.தி.மு.க தலைமை வரை சென்று தற்போதைய கரூர் மாவட்ட அ.தி.மு.க பொறுப்பாளரும்,
தமிழக போக்குவரத்து துறை மற்றும் தொழில் துறை அமைச்சருமான தங்கமணி மற்றும் முன்னாள்
அமைச்சரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு அ.தி.மு.க
கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர், நகர்மன்ற ஆணையர்
உள்ளிட்ட அனைத்து அலுவலர்களையும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுற்றுலா
அரங்கில் சென்று இரவு வரை பேச்சு வார்த்தை நடத்தியது ஏன் என்றும், பத்திரிக்கையாளர்களை
கண்டு அமைச்சர் தங்கமணி ஏன் ஓடினார் என்று விசாரணை நடத்த வேண்டுமென கரூர் நகராட்சியின்
மற்ற தி.மு.க, ம.தி.மு.க உள்ளிட்ட கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கரூர்
நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்த இந்த நாடகமா, இல்லை கமிஷன் பிரச்சினை தான் காரணமா
? மேலும் அந்த கூட்டத்தில் தொழில் மாநாட்டை நடத்தி உலக சாதனை நடத்திய முதல்வர் ஜெ வுக்கு
நன்றி கூற நகர்மன்ற தலைவர் முற்பட்டதாலும் அதை கண்டித்து தான் மற்ற கவுன்சிலர்கள் புறக்கணித்துள்ளனர்
என்று எதிர்கட்சி கவுன்சிலர்கள் வினா எழுப்பியுள்ளனர்.
பேட்டி : நாராயணன்
– தி.மு.க கவுன்சிலர் – கரூர் பெரு நகராட்சி
No comments:
Post a Comment