தென்னிந்திய மண்டல அளவில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற ஜூடோ போட்டியில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
தென்னிந்திய அளவிலான ஜூடோ விளையாட்டு போட்டிகள் கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் கடந்த 29 அன்று தொடங்கி வியாழக்கிழமை (அக்.1) வரை 3 நாட்கள் நடைபெற்றன. இதில், 6 தென் மாநிலங்களில் இருந்து சுமார் 50 பள்ளிகளைச் சேர்ந்த 300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இப்போட்டிகளில் தமிழ்நாட்டின் கரூர் பரணி வித்யாலாயா பள்ளி 9 தங்கப்பதக்கம், 12 வெள்ளிப்பதக்கம், 14 வெண்கலம் வென்று 95 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. கர்நாடகா மாநிலத்தின் கேஎல்இ சொசைட்டி ஆங்கிலப்பள்ளி 39 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தைப் பிடித்தது.
ஒட்டுமொத்த சாம்பியன் (ஆண்கள் பிரிவில்) பட்டத்தை கரூர் பரணி வித்யாலயா பள்ளி 3 தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலம் பதக்கத்துடன் 39 புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டத்தையும், புதுவை ஆதித்யா வித்யாஸ்ரமம் 31 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தையும் பிடித்தது.
பெண்கள் பிரிவிலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கரூர் பரணி வித்யாலயா பள்ளி 6 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலத்துடன் 56 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், கர்நாடகா மாநிலத்தின் கேஎல்இ சொசைட்டி ஆங்கிலப்பள்ளி 18 புள்ளிகளைப் பிடித்து 2-ஆம் இடத்தையும் பிடித்தன.
போட்டித் தொடரின் சிறந்த வீரராக கரூர் பரணி
வித்யாலயா பள்ளி மாணவர் என். ஆகாஷ், சிறந்த வீராங்கனையாக புதுவை மாநிலத்தின் ஆதித்யா வித்யாஸ்ரமம் பள்ளி வீராங்கனை சரோஜின் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொடர்ந்து வியாழக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் எஸ்.மோகனரங்கன்,சி.பி.எஸ்.இ. பார்வையாளர் சதீஷ்குமார் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கிப் பாராட்டினர்.
No comments:
Post a Comment