பெண்களை காலில்
விழ வைத்து வேடிக்கை பார்த்த மு.க.ஸ்டாலின் கரூரில் நடந்த விநோதம்
தமிழக முதல்வராக
தற்போது பொறுப்பு வைக்கும் ஆளுகின்ற அ.தி.மு.க கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான
ஜெயலலிதாவின் காலில் விழுந்தால் தவறு, அமைச்சர்கள் முதல் முதியவர்கள் வரை காலில் விழுந்தால்
தவறு, அதற்கு வித்யாசமான ஆசனங்களை கொண்டு நையாண்டி செய்யும் ஊடகங்கள் கரூர் மாவட்டத்தில்
தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த கோரி நொய்யல்,
மறவாபாளையம், கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட பல பகுதிகளில் பயணம் மேற்கொண்டார்.
இவரது பயணத்தை இங்குள்ள தி.மு.க வினருக்கே பிடிக்க வில்லை எனவும், இந்த நிகழ்ச்சியை
இருட்டடிப்பு செய்யும் விதத்தில் பல்வேறு தரப்பினர் இயங்கி அதை மாவட்ட செயலாளர் நன்னியூர்
ராஜேந்திரனும், அவரது நேர்முக உதவியாளர் கோழி செந்தில் என்கின்றவரும் போட்டி போட்டுக்
கொண்டு அவரது செயலை இருட்டடிப்பு செய்யும் விதத்தில் நடந்து கொண்டு வந்தனர். இந்நிலையில்
அங்கு ஆரத்தி எடுத்த பெண்களை காலில் விழ கூறியுள்ளனர். அப்பெண்கள் ஸ்டாலினை விட வயது
வித்யாசத்தில் மூத்தவர்கள் ஒரு புறம் இருக்க, பெண்ணினத்திற்கே பங்கம் விளைவிக்கும்
வகையில் அவர்களை காலில் விழ வைத்து வேடிக்கை பார்த்த மு.க.ஸ்டாலினுக்கு மகளிர் சங்கங்கள்
மற்றும் மாதர் சங்கங்களிடையே எதிர்ப்பு அதிகரித்துள்ளது. ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக
பார்த்து கும்பிடும் அமைச்சர்களை நையாண்டி தனமாக சித்தரித்து எழுதும் ஊடங்கள் இந்த
மாதிரி சம்பவங்களையும் சுட்டி காட்ட வேண்டுமென்பது, சமூக நல ஆர்வலர்களின் ஒரு மித்த
கருத்தாகும்,
பத்திரிக்கை ஜனநாயகம்
காக்க பட வேண்டுமானால் அனைத்து பத்திரிக்கைகளும் கட்சி சாயமின்றி செயல் பட்டால் இது
போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும் என்பது மூத்தபத்திரிக்கையாளர்களின் ஒரு மித்த
கருத்தாகும், ஸ்டாலினுடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இளைஞருக்கு அடி, நீலகிரியில்
செல்பி எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநருக்கு அடி இந்த சம்பவங்களை தொடர்ந்து பெண்களை காலில்
விழ வைத்து வேடிக்கை பார்த்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment