Sunday, 11 October 2015

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக இணைய தள நண்பர்களின் கலந்தாய்வு கூட்டம் -சங்கரன் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக இணைய தள நண்பர்களின் கலந்தாய்வு கூட்டம் சங்கரன் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. 
நெல்லை மாவட்டம், சங்கரன் கோயிலில் மறுமலர்ச்சி தி.மு.க வின் கொள்கை இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றி வரும் மறுமலர்ச்சி இணைய தள நண்பர்களின் கலந்தாய்வு கூட்டம்  சரஸ்வதி கபே சுவாமி சன்னதி சங்கரன் கோவில் நகரில் கழக மாணவர் அணி மாநில செயலாளர் தி மு ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது, 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :1 கழக பொதுச் செயலாளர் இளைய சமுதாயத்தின் கனவுகளுக்கு சிறகுகளாய் வாய்த்த தலைவர் வைகோ அவர்களை ஒருங்கிணைப்பாளராக கொண்டு செயல் படும் மக்கள் நலக்கூட்டு இயக்கம் 2016 மே மாதம் நடைபெற்றும் சட்ட மன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற பொது மக்களையும், இளைய மாணவச் சமூகத்தையும் ஈர்க்கும் வகையில் இணைய வழி பிரச்சாரப் பணிகளை வெகு சிறப்பாக முன்னெடுத்து செல்வது என்று இக் கூட்டம் ஒரு மனதாக தீர்மானிக்கிறது,
2 -வேலைவாய்ப்புகளிலும் பொருளாதார நிலைகளிலும் மிகவும் பின் தங்கிய திருநெல்வேலி மாவட்டத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இணைய மறுமலர்ச்சிக்கும் வழி வகுக்கும் நெல்லை கங்கை கொண்டான் ஐ டி பார்க் முழு வீச்சில் இயங்க வில்லை என்பதை இக் கூட்டம் கவலையுடன் சுட்டிக் காட்டுவதுடன் ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிடும் தொழிற் தொடர்பு பூங்காவினை அமைத்திட முன்வருமாறு மத்திய மாநில அரசுகளை இக் கூட்டம் வலியுறுத்துகிறது,
3-திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அபாயம் பெருமளவு உள்ளதை இக் கூட்டம் கவலையுடன் சுட்டிக் காட்டுகிறது, நெல்லை தாணார் குளத்தில் கடந்த வாரத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் இறந்து விட்டார், இன்று கூட முக்கூடல் நகரில் டெங்கு காய்ச்சலால் குழந்தை ஒன்று இறந்து தகவல் வருகிறது,
திருநெல்வேலி மாவட்டத்தை டெங்கு காய்ச்சல் பாதிப்பு மாவட்டமாக தமிழக அரசு அறிவித்தது சிறப்பு மருத்துவ குழுக்களை போர் கால வேகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள முன்வருமாறு தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் இக் கூட்டம் கேட்டு கொள்கிறது,
4-மறுமலர்ச்சி தி.மு கழகத்திற்கு ஒரு தொலை காட்சி தொடங்க வேண்டும் என்று பொது செயலாளர் வைகோ அவர்களை இந்த கூட்டம் கேட்டு கொள்கிறது, 

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றோர் விபரங்கள் வருமாறு:- மத்தேயூ ஜெபசிங் (மாநில தேர்தல் பணி துணைச் செயலாளர்) , மாரிச்சாமி (நகர மதிமுக செயலாளர் சங்கரன் கோவில்) , இசக்கியப்பன் (நகர இளைஞரணி செயலாளர்) , ஆறுமுக சாமி (நகர மாணவரணி செயலாளர்)
ராஜமாணிக்கம் (நகர துணை செயலாளர்), வாணி முருகன் (நகர இளைஞர் அணி), வெங்கட் (இணையதள ஒருங்கிணைப்பாளர்) மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்ட இணைய தள தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்

No comments:

Post a Comment