Monday, 12 October 2015

மகாளய அமாவாசை: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபாடு


திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
நேற்று இரவே திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து இருந்தனர்.
அவர்கள் இரவில் கோவில் குளக்கரையில் தங்குவது வழக்கம். தற்போது ரூ. 1 கோடி மதிப்பில் கோவில் குளம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், பக்தர்களை கோவில் குளக்கரைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.
இதனால் பக்தர்கள் தங்குவதற்கு இடமின்றி, கோயில் நுழைவு வாயிலின் வெளியேயும், சிமெண்ட் சாலையிலும், பஸ் நிலையம், ரயில் நிலையம், பெட்ரோல் பங்க் ஆகிய பகுதிகளிலும் தூங்கினர்.
இன்று காலை கோவில் குளத்தில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதைத் தொடர்ந்து கோயிலுக்கு சென்று மூலவர் வீரராகவ பெருமாளை நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment