தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று கரூர் அருகே உள்ள நொய்யல், மறவாபாளையம் பகுதியில் நமக்கு நாமே பயணத்தை துவக்கினார்
மக்களை பற்றி கவலைப்படும் கட்சி திமுக உங்கள்
பிரச்சனைகளை தேர்தல் வாக்குறுதியில் சேர்த்து ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள் மட்டும்
அன்றி அனைத்து தரப்பு மக்களின் பிரச்சனைகளை தீர்ப்போம்,திமுக ஆட்சிக்கு வருவதை பற்றி
நாங்கள் நம்புகிறோமோ இல்லையோ எங்களைவிட உங்களுக்கு அதிகம் நம்பிக்கை உள்ளது என தெரிகிறது,கரும்பு
விவசாயிகளுக்கு ஆலை முதலாளிகள் ரூ 720 கோடி நிலுவை வைத்துள்ளது.இதைப்பற்றி இந்த ஆட்சி
கவலைபடவில்லை,5 முறை ஆட்சியில் இருந்த திமுகவின் ஆட்சி மீண்டும் தொடர பல பிரச்சனைகளை
தீர்க்க உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நீங்கள் ஆதரவு தர வேண்டுகிறேன் கரூர் அருகேயுள்ள
மறவாபாளையம் பகுதியில் கரும்பு விவசாயிகளை
சந்தித்த ஸ்டாலின் பேசினார். மேலும் இதையடுத்து கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட
பகுதிகளிலும் தனது நமக்கு நாமே திட்டத்தில் கீழ் கலந்து கொண்டு அங்குள்ள பகுதி மக்களை
சந்தித்து பேசினார்.
No comments:
Post a Comment