கரூர் மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க சார்பில், மறுமலர்ச்சி பயணம்
அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தமிழகத்தில் கடந்த சில
தினங்களுக்கு முன்னர் காஞ்சிபுரத்தில் பயணத்தைத் தொடங்கிய வைகோ நேற்று இரவு முதல்
இன்று வரை கரூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று 22 ஆண்டுகளுக்கு முன்னர்
இதே நாளில் மறுமலர்ச்சி தி.மு.க உருவாக காரணமான நொச்சிப்பட்டி
தாண்டபாணி இறந்த இடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி பின் இயக்கம் உருவாக காரணமான நொச்சிப்பட்டி
தண்டபாணி உள்ளிட்ட ஐவர் படங்களுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சின்ன வளையப்பட்டியில்
நடைபெற்ற இந்நிகழ்ச்சியை
தொடர்ந்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது கூறுகையில்
தொண்டர்களால் தொடங்கப்பட்ட
இயக்கம் மதிமுக. விளம்பரத்துக்காக நான் நடைபயணம் மேற்கொள்ளவில்லை. எத்தனையோ சோதனைகளை
கடந்து தமிழகத்தின் மக்களின் நலனுக்காக பாடு
படும் இயக்கம் நம்பகத்தன்மையை இந்த இயக்கம் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் வாழ்வாதரத்தை
பாதுகாப்பதில் எங்கள் அளவில் தி.மு.க வும், அண்ணா தி.மு.க வும் போராடவும், இல்லை, பாடு
படவும் இல்லை. சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும்,
சரி ஸ்டைர்லைட் நாசகார திட்டத்தை தி.மு.க வும், அண்ணா தி.மு.க வும் துரோகம் செய்து
விட்டது. உலக கோடீஸ்வர நிறுவனத்தை எதிர்த்து மக்கள் நீதிமன்றத்திலும் போராடி, உயர்நீதிமன்றத்திலும்
போராடி, உச்சநீதிமன்றத்திலும் போராடி வெற்றி பெற வில்லை. ஆனாலும் தொடர்ந்து வழக்கி
நடத்தி வருகிறோம். மதுவை ஒழிக்க வேண்டும் என்பதற்காக 2,500 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டேன்.
தவிர,ஓட்டுக்காக அல்ல. தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் தமிழகத்தை பாழ்படுத்தி
விட்டது என்றார். மேலும் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை தொடர்ந்து ஈசநத்தம், அரவக்குறிச்சி,
பள்ளபட்டி, வேலாயுதம் பாளையம் உள்ளிட்ட கரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் பிரச்சார்த்தில்
ஈடுபட்டார். அப்போது முன்னாள் எம்.பி ஈரோடு கணேசமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். மேலும் இதற்கான முழு ஏற்பாடுகளையும் அரவக்குறிச்சி ஒன்றிய ம.தி.மு.க செய்திருந்தது. மேலும் அரவக்குறிச்சி ம.தி.மு.க செயலாளர் கலையரசன் முன்னிலையில் ஈசநத்தம் பகுதியில் ஜெகநாதன் தலைமையில் சுமார் 75 நபர்கள் தி.மு.க வில் இருந்து ம.தி.மு.க வில் இணைந்தனர்.
No comments:
Post a Comment