சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் தந்தை க.சாமியப்பகவுண்டர் நேற்று மாலை கரூரில் காலமானார். 100 வயதான இவர் கரூர் அருகே உள்ள தும்பிவாடி கிராமத்தில் விவசாயத்தை கவனித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை மரணமடைந்தார். அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சி இன்று(திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு தும்பிவாடி கிராமத்தில் நடக்கிறது.
மனிதநேய அறக்கட்டளையின் அறங்காவலர்களின் ஒருவரான க.சாமியப்ப கவுண்டர் சென்னை வேளச்சேரியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பெயரிலான இலவச திருமண மண்டபத்திற்கு தன் பெயரில் இருந்த சொத்தினை தானமாக வழங்கியுள்ளார். மேலும் பல நலத்திட்டங்களை மகன் சைதை துரைசாமியுடன் இணைந்து செய்து வந்தார். சாமியப்ப கவுண்டருக்கு, சைதை துரைசாமி உள்பட 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
மறைந்த சாமியப்ப கவுண்டர் உடலுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பழனிச்சாமி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி மற்றும் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், கரூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

No comments:
Post a Comment