Sunday, 4 October 2015

என்னம்ம இப்படி பன்றீங்களேம்மா என்பதை போல !! மனைவியுடன் வாழ ஒரு மாதத்தில் கழிப்பறை கட்ட வேண்டும்: கணவரிடம் குடும்ப ஆலோசனை மையம் அறிவுறுத்தல்




மகாராஷ்டிர மாநிலம் பீடல் மாவட்டம் சவுகிக்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். அவருக்கும் பிபாரியா கிராமத்தைச் சேர்ந்த சீமா(20)வுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. திருமணமாகி புகுந்த வீட்டுக்குள் நுழைந்த சீமாவுக்கு அங்கு கழிப்பறை இல்லாதது தெரியவந்தது. இதனால் அதிருப்தி அடைந்த அவர், கழிப்பறை கட்டிக் கொடுக்கும்படி கணவரை பலமுறை வலியுறுத்தினார்.
ஆனால், மோகன் அதற்கு செவி சாய்க்கவில்லை. திருமணமாகி 2 ஆண்டுகள் வரை பொறுத்துப்பார்த்த சீமா, தனது தாய் வீட்டுக்குத் திரும்பிவிட்டார். கடந்த 19 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில், குடும்ப ஆலோசனை மையத்தில் மோகன் தன் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் தெரிவிததார். இதையடுத்து, நேற்று முன்தினம் சீமா மற்றும் மோகன் குடும்பத்தினர் குடும்ப ஆலோசனை மையத்துக்கு சென்று சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.
சீமாவிடம் பேசிய குடும்ப ஆலோ சனை மைய உறுப்பினர் ரஜனி கெய்க்வாட், மனைவி திரும்பி வந்து தன்னுடன் இணைந்து வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டால் மோகன் ஒரு மாதத்துக்குள் கழிப்பறை கட்ட வேண்டும் என அறிவுறுத்தினார்.
பீடல் காவல் துறை கண்காணிப் பாளர் ராகேஷ் குமார் கூறும்போது, “அந்த இளைஞர் கழிப்பறை கட்டுவ தால் அந்தக் குடும்பம் உடையாமல் காப்பது மட்டுமின்றி, இம்மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தூய்மைப் பிரச்சாரத்துக்கும் பங்களிப்பதாக இருக்கும். குடும்பத்தைச் சேர்த்து வைப்பது மட்டுமின்றி, தூய்மை பிரச்சாரத்துக்கும் உதவிய குடும்ப ஆலோசனை மையத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
பீடல் மாவட்டத்தில் ஏற்கெனவே இரு பெண்கள், தங்கள் வீடுகளில் கழிப்பறை இல்லாததால் கணவனுடன் இணைந்து வாழ மறுத்த சம்பவம் செய்திகளில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
மத்தியப்பிரதேசத்தில் கிராமங் களில் உள்ள 83 லட்சம் வீடுகளில் கழிப்பறை இல்லை என்பது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment