Tuesday, 6 October 2015

பலநாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள போது முதலீட்டுக்கு ஏற்ற இடமாக இந்தியா உள்ளது: பிரதமர் மோடி



இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் பெங்களூருவுக்கு நேற்று இரவு சென்றார்.  இன்று காலை பெங்களூரு ஆடுகோட்டியில் உள்ள ‘நாஸ்காம்’ என்னும் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் தேசிய கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வர்த்தக நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன், ஏஞ்சலா மெர்க்கெல் கலந்து கொண்டார். 

இந்திய மற்றும் ஜெர்மனி பிரதமர்கள் வருவகையொட்டி பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது அவர்கள் பயணம் செய்யும் சாலைகளில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பயணத்தின்போது சில சாலைகளில் வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டதால், பெங்களூருவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

*ஜி.எஸ்.டி மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளோம். வரும் 2016 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றிவிடுவோம். 

*சுற்றுசூழல் அனுமதி பாதுகாப்பு அனுமதி போன்ற சிக்கலான விஷங்களை எளிதாக்கியுள்ளோம்.

*இந்தியாவில் முதலீடு செய்ய அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். 

*ஜெர்மனி நாட்டின் தொழில்நுட்பங்களை இந்தியா வரவேற்கிறது. 

*வணிக சூழலை மேம்படுத்த 15 மாதங்களில் கடுமையாக உழத்திருக்கிறோம்: பிரதமர் மோடி

*பொருளாதார ரீதியில் இந்தியா ஜெர்மனி இணைந்து செயல்பட பல வாய்ப்புகள் உள்ளன 

*பலநாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள போது முதலீட்டுக்கு ஏற்ற இடமாக இந்தியா உள்ளது

*உற்பத்திதுறையை முடுக்கி விடுவதற்காக மேக் இன் இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டது. 

அந்நிய முதலீடுகள் அதிகரிப்பதற்காக விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. 

*தொழில் கட்டமைப்பு துறையில் அனுமதியை மிக விரைவாக மத்திய அரசு தந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment