நேபாள நாட்டில் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒளி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேபாள நாட்டில் புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டதையடுத்து, ஏழு மாகாணங்களாக பிரிக்கப்படுகிறது. இதற்கு மாதேசி, தாரு உள்ளிட்ட பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், பிரதமர் சுசில் கொய்ராலா பதவி விலகியதால் புதிய பிரதமர் தேர்வு நேற்று நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் மொத்தமுள்ள 587 உறுப்பினர்களில் 338 உறுப்பினர்களின் ஆதரவுடன், கே.பி.சர்மா ஒளி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். சுசில் கொய்ராலா 249 வாக்குகளே பெற்றார்.
நேபாள கம்யூனிஸ்டு – ஒன்றுபட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் தலைவரான சுசில் கொய்ராலாவுக்கு, ஐக்கிய கம்யூனிஸ்டு – மாவோயிஸ்டு, ராஷ்ட்ரீய பிரஜாதந்திரா கட்சி, மாதேசி ஜனாதிகார் கூட்டமைப்பு – ஜனநாயகம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவாக வாக்களித்தன.
நேபாளத்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டு உள்ள கே.பி.சர்மா ஒளிக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment