Sunday, 11 October 2015

காவல்துறைக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யுவராஜ் விவகாரம் - யுவராஜை ஒருநாள் நீதிமன்ற காவல்: காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. திட்டம்!



சேலம்: பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்‌டுள்ள யுவராஜ், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்குப் பின் நாமக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
 
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் மற்றும் திருச்செங்கோடு பெண் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்தவர் மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ். வாட்ஸ் அப் மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு தலைமறைவாக இருந்தபடியே பேட்டியளித்த யுவராஜ் நேற்று நாமக்கல்லில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் சரணடைந்தார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட யுவராஜிடம், 12 மணி நேரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

மருத்துவ பரிசோதனைக்கு பின் நேற்றிரவு நாமக்கல் மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் யுவராஜ் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மலர்மதி, அவரை ஒருநாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, யுவராஜ் நாமக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், யுவராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment