Monday, 12 October 2015

தொடருது மழை, வரப்போகிறது தீபாவளி பண்டிகை – வெள்ளம் மற்றும் பண்டிகை தினத்தில் நடைபெறும் தீ விபத்துகளில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற செயல்முறை விளக்கம் – அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கண்டு களித்தனர்






கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள் கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தையடுத்து நாளை (13-10-15) தேசிய பேரிடர் குறைப்பு தினம் நடைபெறுவதையொட்டி  மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயந்தி தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பார்த்து பயன்பெறும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மூலம் பேரிடர் காலங்களில் தங்களை எவ்வாறு காத்துக்கொள்ளுவது தொடர்பான செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.  தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி, அமராவதி, நொய்யல் உள்ளிட்ட ஆற்றுப்பகுதிகளின் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இயல்பு, மேலும் இந்த தொடர்மழையினால் ஆங்காங்கே ஏரி, குளம் ஆகியவனைகள் நிரம்பி வழியும், இதிலிருந்து மக்களை காப்பாற்றி கொள்ளவும், வர உள்ள தீபாவளி பண்டிகை தினத்தில் கரூர் மாவட்டத்தில் பட்டாசு விபத்துகள் ஏற்படாத வண்னம் பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்ள ஏதுவாக இந்த செய்முறை விளக்கம் அமைந்தது. மேலும் இச்செயல்முறை விளக்கத்தின்போது மின்கசிவின்போது ஏற்படும் விபத்து, எரிவாயு கசிவின்போது ஏற்படும் தீவிபத்து, திடப்பொருள்களால் ஏற்படும் தீவிபத்து போன்ற காலங்களிலும்,   மழை, வெள்ள காலங்களில் ஏற்படும் அதிகளவு நீரிலிருந்து தங்களை காத்துக்கொள்வது தொடர்பாகவும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அரசுத்துறை அதிகாரிகள் மட்டுமில்லாமல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கு கொண்டு மனுக்கள் கொடுக்க வந்த பொதுமக்களும் இதில் பங்கேற்று பயன்பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் தீயணைப்பு துறையினர் சிறப்பாக செய்திருந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அருணா, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் முனைவர்.ரமேஷ், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் அப்துல்பாரி, தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ராஜகோபால்  மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment