Tuesday, 3 November 2015

போடாத தார்சாலை, கட்டிமுடிக்கப்படாத கட்டிடங்கள் என பல கோடி ரூபாய் பஞ்சாயத்து நிதி மோசடியில் ஈடுபட்ட பஞ்சாயத்து தலைவரை அதிரடி நீக்கம் செய்து கலெக்டர் நடவடிக்கை – பரபரப்பு


கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியம், நெரூர் வடபாகம் பகுதி பஞ்சாயத்து தலைவரான மணிவண்ணன், இப்பகுதியில் போடப்படாத சாக்கடை, தெருவிளக்கு, சாலைகள் என பலவற்றைகளை முன்னாள் கலெக்டர் ஷோபனா உதவியுடன் அனைத்து வேலையும் செய்து முடித்ததாக தகவல் தந்து அரசு நிதியை முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பஞ்சாயத்து தலைவர் அ.தி.மு.க வை சார்ந்த மணிவண்ணனை கடந்த செப்டம்பர் மாதம் 28 ம் தேதி  மண்மங்கலம் தாசில்தார் திருவாசகம் விசாரணை மேற்கொண்டார். மேலும் தற்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி உத்திரவின் பேரிலும், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உத்திரவிற்கிணங்க நடைபெற்ற இந்த விசாரணை போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் பஞ்சாயத்து கவுன்சிலர்களிடையே நடைபெற்ற இந்த ஆய்வு மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்க உள்ளதாக தாசில்தார் திருவாசகம் தெரிவித்தார். இதையடுத்து அரசு விதிமுறைகளுக்கு முரணாக செலவினம் மேற்கொண்டு, ஊராட்சி நிதிக்கு இழப்பு ஏற்படுத்தியதாலும், ஊராட்சி சாலை அமைத்தல் பணிகளில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாதாலும், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 ன் கீழ் ஊராட்சி  மன்றத்தலைவரை பதவி நீக்கம் செய்யக்கூடாதா என அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவைகள் குறித்து உறுதி செய்யப்பட்டது. ஊராட்சி நிதிகளை இழப்பீடு செய்தது, பதிவேடு, மற்றும் ஆவணங்களை அடிப்படை விதிமுறைகளை மீறி செயல்பட்டது மற்றும் ஊராட்சிக்கு இழப்பீடு செய்யப்பட்டது ஆகியவை உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் (வடக்கு) மணிவண்ணன் என்பவரை ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற முறையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயந்தியால் பதவிநீக்கம் செய்யப்பட்டதோடு இதற்கான அறிவிப்பை அரசிதழிலும் வெளியிடப்பட்டு, இந்த உத்திரவு அமலுக்கு வரும் என அறிவித்துள்ளனர். மேலும் பதவிநீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணனின் மனைவி கீதா மணிவண்னன் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் என்பதும், இருவருமே அ.தி.மு.க வை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment