Tuesday, 3 November 2015

சிவகங்கையில் மக்கள் நல கூட்டணி சார்பில் சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க செயலாளர் புலவர் செவந்தியப்பன் தலைமையில் ஆர்பாட்டம்




சிவகங்கை மாவட்ட மக்கள்நல கூட்டனி சார்பாக மத்திய, மாநில அரசை கண்டித்து சிவகங்கை மாவட்டச்செயலாளர் புலவர் செவந்தியப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.. இக்கூட்டத்தில் சி.பி.ஐ. மாவட்டச்செயலாளர் எஸ்.குணசேகரன் எம்.எல்.ஏ. , சி.பி.எம். மாவட்டச்செயலாளர் மு.கந்தசாமி, வி.சி.க. மாவட்டச்செயலாளர்கள் பூ.வே.கந்தன், வெ.மலைச்சாமி ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள்.. இதில் மதிமுக,சி.பி.ஐ., சி.பி.எம்., வி.சி.க . மாநில , மாவட்ட, ஒன்றிய,நகர் நிர்வாகிகள் மாற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி பிரமுகர்கள் மட்டுமில்லாமல் பொது நல ஆர்வலர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு மாநில, மத்திய அரசிற்கு எதிரான முழக்கங்கள் எழுப்பினர்

No comments:

Post a Comment