Wednesday, 4 November 2015

சென்னையில் அரை மணி நேரம் மழை பெய்தாலே சாலைகளில் படகில்தான் போக வேண்டும்: பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்


சென்னையில் டெங்கு காயச்சலை பரவுவதை தடுக்க தவறியதாக கூறி சென்னை மாநாகராட்சியை முற்றுகையிட்டு புதன்கிழமை பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,

சென்னை மக்கள் காப்பாற்றப்பட வேண்டும். தமிழக மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டிருக்கும் மாநகராட்சி தங்களின் நடவடிக்கையை துரிதப்படுத்தி நிச்சயமாக தமிழக மக்களுக்கு ஆரோக்கியத்தை தர வேண்டும் என்பதை மிக வலிமையாக நாங்கள் வலியுறுத்துகிறோம். 

டெங்கு காய்ச்சல் குறைந்திருக்கிறது குறைந்திருக்கிறது என்று மக்கள் மாநகராட்சியினால் ஏமாற்றப்படுகிறார்கள். மிக மிக மோசமான நிலையில் தமிழகம் இன்று இருந்துக்கொண்டிருக்கிறது. பருவ மழையா இல்லை சென்னை மக்களை பறிதவிக்க வைக்கும் மழையா என்ற நிலையில், அரை மணி நேரம் மழை பெய்தால் கூட இந்த சாலைகளில் காரில் போக முடியாது, படகில்தான் போக வேண்டும். படகில் கூட போக முடியாது கப்பலில்தான் போக வேண்டும். குழந்தைகள் கழுத்தளவு நீரில் மிதந்து சென்றுகொண்டிருக்கிறார்கள். பெரியவர்கள் எல்லாம் முட்டியளவு தண்ணீரில் நடந்து கொண்டிருக்கிறார்கள். என்ன அவலம் இது. 

15 மண்டலங்களாக பிரித்துவிட்டார்களாம். இதில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி செய்து கொண்டிருக்கிறார்களாம். டெங்கு காய்ச்சல் கட்டுக்கடங்காமல் இருந்து கொண்டிருக்கிறது. தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் பேசும்போது, ஒரு நாளைக்கு 3 அல்லது 4 டெய்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவரை பார்ப்பதாக கூறுகிறார்கள். ஆனால் சென்னை மாநகராட்சி இதனை மறுக்கிறது என்றார். தமிழகம் தத்தளித்துக்கொண்டிருக்கும் சூழலில் இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டே ஆக வேண்டும். தமிழக அரசை எதிர்க்க அத்தனை கட்சிகளும் ஒன்று கூட வேண்டும். யார் முதல்வர் என்று சண்டையிட்டுக்கொட்டிருக்க வேண்டாம்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பிறகு அறிவித்துக்கொள்வோம். தமிழகத்தில் மக்களை சந்திக்காத முதல்வரையும், ஆட்சியை பிடிக்க துடித்துக்கொண்டிருக்கும் திமுகவையும் அப்புறப்படுத்த வேண்டியது அவசியம்" என்றார் அவர்.
இந்தப் போராட்டத்தில் கட்சியின் மாவட்ட தலைவர்கள் பிரகாஷ், ஜெயசங்கர், காளிதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் முற்றுகையிட முயன்றதாக 150 பேர் பா.ஜ.க தலைவரோடு கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment