Wednesday, 4 November 2015

தேசியத் தலைவர்களை சற்று நாவடக்கத்துடன் பேசினால் குஷ்புவுக்கு நல்லது -அகில இந்திய செயலாளர் ஹசீனா எச்சரிக்கை


தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், தங்கபாலு, குமரி அனந்தன் உள்ளிட்டோர் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து முறையிட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இளங்கோவன் தங்கபாலு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு டெல்லி சென்று, சோனியா மற்றும் ராகுலை சந்தித்து பேசினார். அப்போது இளங்கோவனுக்கு தனது ஆதரவை அவர் தெரிவித்தார்.

பின்னர் குஷ்பு கூறும் போது, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நடிகைகளை நம்பி காங்கிரஸ் இல்லை என்று தெரிவித் துள்ளார். ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், தங்கபாலு என தனி நபர்கள் யாரையும் நம்பி காங்கிரஸ் இல்லை என்று தெரிவித்தார்.கோடிக்கணக்கான தொண்டர்களையும், நேரு, இந்திரா, ராஜீவ் போன்ற தலைவர்களின் தியாகத்தையும் நம்பியே காங்கிரஸ் கட்சி உள்ளது என்றும் அவர் கூறினார்.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத் கண்டனம் தெரிவித்துள் ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சிக்கு வந்து ஒரு வருடத்தை பூர்த்தி செய்கிற குஷ்பு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம் பரத்தைப் பற்றி விமர்சிக்கத் தகுதியற்றவர். நீங்கள் யாரை நம்பி இருக்கிறீர்கள் யார், யாரை நம்பி இருக்கிறார்கள் என்பதை இந்த நாடறியும்.

நீங்கள் முன்பு இருந்த கட்சியில் இது போல் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களை விமர்சித்த தால் கட்சியை விட்டு வெளியே வந்த வரலாற்றை தமிழ்நாட்டு மக்கள் அறிந்தே உள்ளார்கள்.கட்சிக்காக உழைத்து, உழைத்து தங்களை அர்பணித் துக் கொண்டவர்களைப் பற்றியும், தேசமே போற்றும் தேசியத் தலைவர்களைப் பற்றியும் சற்று நாவடக்கத் துடன் பேசினால் குஷ்புவுக்கு நல்லது.

யாரை நம்பியும் காங்கிரஸ் இல்லை என்று குஷ்பு குறிப்பிடுகிறார். காங்கிரஸ் கட்சி சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் இரு வரின் போர்ப்படைத் தளபதி களாம் அன்புத் தலைவர் களையும், அருமைத் தொண் டர்களையும், மக்களையும் நம்பி உள்ளது என்பதை ஆணித்தரமாக நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment