தமிழகத்தில் கடந்த
சில தினங்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையானது ஆங்காங்கே நல்ல முறையில் பெய்து
வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் நேற்று (05-11-15) அரவக்குறிச்சி பகுதியில்
73 மி.மீட்டர் அளவும், க.பரமத்தி பகுதியில் 151.6 மி.மீட்டர் அளவும் பதிவாகின. இந்நிலையில்
குளித்தலை 20 மி.மீட்டர், மாயனூரில் 44 மி.மீட்டரும்
பதிவாகின. கரூரில் 69 மி.மீட்டர் அளவும் பதிவாகின, அனைப்பாளையம் 111 மி.மீட்டர் அளவும் பதிவாகின. கிருஷ்ணராயபுரத்தில் 42 மி.மீட்டர், மைலம்பட்டி
பகுதியில் 85 மி.மீட்டர் அளவும் என கரூர் மாவட்டத்தில் 12 இடங்களில் சுமார் 804 மி.மீட்டர்
அளவு பதிவாகின. சராசரி மழையளவு 67 விழுக்காடு ஆகும். இந்நிலையில் கரூர் இராஜாஜி நகர்
பகுதியில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும்
இந்த பள்ளம் ஏற்பட்ட போது போக்குவரத்து அதிகம் இல்லாத நிலையில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் பள்ளத்தை கரூர் கலெக்டர் ஜெயந்தி, கரூர் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, கரூர்
நகர்மன்ற தலைவர் தமிழ்நாடு செல்வராஜ், நகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்
என பலரும் ஆய்வு செய்து மாற்று வழியில் மற்ற வாகனங்களை திருப்பி விட்டனர். மேலும் இதே
போல, கரூர் காவல் நிலையம் அருகே சி.எஸ்.ஐ அரசு உதவி பெரும் பள்ளியில் மழை நீர் குளம்
போல தேங்கி காணப்பட்டதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதில் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
மேலும் இப்பகுதி மட்டுமில்லாமல் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனை அருகிலேயே உள்ள ரோட்டில்
மழைநீர் ஏரி போல் வடியாமல் இருந்ததால் நோயாளிகளுக்கு மீண்டும் சீக்கு வருமோ என்ற அச்சத்தில்
பெரும் பரப்பரப்புடன் காணப்படுகின்றனர். ஆனால் அ.தி,மு.க கட்சியினர் மட்டுமே இந்த துரித
வேலையில் ஈடுபட்ட வரும் நிலையில் மற்ற கட்சியினர் எங்கே சென்றார்கள் என்பது பொதுமக்கள்
மற்றும் சமூகநல ஆர்வலர்களின் கருத்தாகும். எப்போதுமே எங்கேயும் தாமதமாக வரும் எம்.எல்.ஏ
செந்தில் பாலாஜி தற்போது மாவட்ட ஆட்சியர் வருவதற்கு முன்னரே அங்கிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment