இந்திய அரசு நிறுவனங்களில்
உள்ள வேலை வாய்ப்புகளை தமிழக மக்களுக்கு வழங்ககோரி திண்டுக்கல்லில் இரயிலை மறிக்க முயன்ற
மனித நேய மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளை
தமிழர்களுக்கு வழங்க வலியுறுத்தியும், ஆளில்லாத இரயில்வே கேட்டிற்க்கு தேவைப்படும்
30 ஆயிரம் பணிகளை ஐசிஎப் தென்னக இரயில்வேயில் பயிற்சி பணி முடித்த மாணவர்களுக்கு வழங்க
வேண்டும். இதே போல் இந்திய அரசு நிறுவனங்களில் தமிழக எஸ்.சி,எஸ்.டி, ஓபிசிக்கு ஒதுக்கபட்ட
49.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த கோரி மத்திய அரசுக்கு எதிராக திண்டுக்கல்
இரயில்வே நிலையத்தில் மயிலாடுத்துறை பயணிகள் இரயிலை மறிக்க முயன்ற மனித நேய மக்கள்
கட்சியினர் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment