அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 107-வது பிறந்த நாளான இன்று காலை (செவ்வாய்க் கிழமை), சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்- அமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தி, பிறந்த நாள் விழா சிறப்பு முதல் பிரதியை, நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான தங்கமணி பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகி களும், அமைச்சர் பெரு மக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங் களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment