Sunday, 8 November 2015

பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமாரே தொடருவார்: லாலு பிரசாத் யாதவ் அறிவிப்பு



பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவ்வின் ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளின் மெகா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து பாட்னாவில் இருகட்சி தொண்டர்களிடையே நிதிஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது,

பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமாரே தொடருவார். பீகார் மக்களுக்கு உரிய அந்தஸ்தை பெற நிதிஷ்குமார் பாடுபடுவார். சாதி வேறுபாடுகளை கடந்து மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசையும் அப்புறப்படுத்துவோம் என்றார்.

No comments:

Post a Comment