வைகோ தாயார் மாரியம்மாள் மறைவுக்கு திமுக தலைவர் கலைஞர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
ம.தி.மு.க. பொதுச் செயலாளர், வைகோ அவர்களின் அன்புத் தாயார், திருமதி மாரியம்மாள், தனது 96 வயதில், இயற்கை எய்தினார் என்ற செய்தியினை அறிந்து பெரிதும் வருந்துகிறேன். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் கலிங்கப்பட்டி வைகோ இல்லத்திற்குச் சென்றிருந்தபோது, என்னைத் தாயுள்ளத்தோடு வரவேற்று மகிழ்ந்தது எனக்கு இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கிறது. எனது அன்னையாரைப் போலவே வைகோவின் அன்னையாரும் அன்றாட அரசியலைப் புரிந்து கொண்டு வாழ்ந்தவர். குறிப்பாக வைகோவின் அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலும், ஆதரவாகவும், அரவணைப்பாகவும், ஆலோசனை வழங்குபவராகவும் விளங்கியவர் அன்னையார் மாரியம்மாள். அவரது மறைவினால் வாடும் வைகோ, மற்றும் அவருடைய குடும்பத்தினர், உறவினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment