Thursday, 5 November 2015

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன்


.தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ அவர்களின்  தாயார் மாரியம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத்தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது., 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ அவர்களின் தயார் மாரியம்மாள் அவர்கள் தமது 95வது வயதில் நம்மைவிட்டு பிரிந்தார் என்ற செய்தி துயரத்தை தருகிறது.

ஈழத் தமிழர் பிரச்சனை, மதுவிலக்கு போன்ற தமிழினத்தின் வாழ்வுரிமைப் போராட்டங்களில் வயது மூப்பையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் அன்னை மாரியம்மாள் அவர்கள்.

அண்மையில் கூட கலிங்கப்பட்டியில் மதுக்கடையை அகற்றும் கோரிக்கைக்காக தாமே தலைமை வகித்து போராடி பெண்களுக்கு உந்துசக்தியாக இருந்தவர் அன்னை மாரியம்மாள் அவர்கள்.  

நான் உட்பட தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் பலரும் கலிங்கப்பட்டியில் அண்ணன் வைகோ அவர்கள் இல்லத்துக்கு சென்றால் பாசத்துடன் வரவேற்று உபசரித்த அன்னை மாரியம்மாள் இன்று உடல்நலக் குறைவால் நம்மை விட்டு பிரிந்தது பெருந்துயரத்தை ஏற்படுத்துகிறது.

அன்னை மாரியம்மாளை இழந்துவாடும் அண்ணன் வைகோ அவர்கள் உள்ளிட்ட அவர்தம் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.


No comments:

Post a Comment