Sunday, 11 October 2015

மனோரமாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு: தமிழக முதல்வர் ஜெயலலிதா


தமிழ்த் திரை உலகில் அரை நூற்றாண்டுகாலத்துக்கும் மேலாக கோலோச்சிய மூத்த நடிகை 'ஆச்சி' மனோரமா (வயது 78) அவர்கள் முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் சென்னையில் சனிக்கிழமையன்று காலமானார்  அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- மனோரமா
வின் மரணம் குறித்து கேள்விப்பட்டு மன வேதனை அடைந்தேன். மனோரமாவின் மறைவு, தமிழ்த்திரைப்படத்துறைக்கு பெரும் இழப்பு. அவரது இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவருடன் நடித்த அனுபவங்கள் மனதில் பசுமையாக உள்ளது' என இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மனோரமாவுடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் ஜெயலலிதா. கலாட்டா கல்யாணம் உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து அசத்தியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment