தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி தனது இன்னுயிரை மாய்த்தார் சசி பெருமாள், ஏற்கனவே பூரண மதுவில்க்கையும், கொஞ்சம், கொஞ்சமாக மது விலக்கை அமல்படுத்த கோரி ஆங்காங்கே ம.தி.மு.க, பா.ம.க, தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், த.மா.கா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆர்பாட்டங்கள் நடத்தி வந்தன. ஆனால் இக்கட்சிகள் சசிபெருமாள் மரணத்திற்கு பின்பு மது விலக்கு போராட்டங்களை தீவிரப்படுத்தின. கல்லூரி மாணவர்களும் மதுவிலக்கை அமல் படுத்த கோரி பல்வேறு அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். தற்போதும் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்டைய மாநிலமான கேரள அரசு படிப்படியாக மது விலக்கை அமல்படுத்தும் விதமாக மதுக்கடைகளை மூடி வருகிறது
கேரள மாநிலத்தில் பூரண மதுவிலக்கு கொள்கையின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மேலும் 26 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார் முதல்வர் உம்மன் சாண்டி.
கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில் முதல்வர் உம்மன்சாண்டி, கேரளாவில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு அதிரடியாக அறிவித்தார். இதற்கு மாநிலம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதனையடுத்து அடுத்த 10 ஆண்டுகளில் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும் என்றும் உம்மன்சாண்டி கூறியிருந்தார். மேலும் மதுவிலக்கை அமல்படுத்தும் நடவடிக்கையிலும் உம்மன் சாண்டி அரசு இறங்கியது.

முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் இரண்டு, மூன்று மற்றும் நான்கு நட்சத்திர ஹோட்டல்களில் செயல்பட்டு வந்த அனைத்து மதுபார்களும் மூடப்பட்டன. இதனால் 5 நட்சத்திர ஹோட்டல்களில் மட்டும் மதுக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் கேரளாவில் 370 க்கும் மேற்பட்ட அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இவைகளும் படிப்படியாக மூடப்படும் என்று அரசு அறிவித்தது.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி நாளில் 10 சதவீத மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 36 அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டன. மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்பட்ட 16 மதுக்கடைகளும் மூடப்பட்டன.
இந்த வருடம் காந்தி ஜெயந்தி தினமான நேற்று(வெள்ளி) மேலும் 26 அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டன. பாலக்காட்டில் 4 கடைகளும், எர்ணாகுளம், கொல்லம் ஆகிய இடங்களில் தலா 3 கடைகளும், திருவனந்தபுரம், கோட்டையம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய இடங்களில் தலா 2 கடைகளும், பத்தனம்திட்டா, ஆழப்புழா, இடுக்கி, திருச்சூரில் தலா 3 மதுக்கடைகளும் மூடப்பட்டு உள்ளன.
கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

No comments:
Post a Comment