தமிழ் திரைப்பட நடிகையுமான மனோரமா சென்னையில் நேற்று இரவு காலமானார். ஆச்சி மனோரமா உடலுக்கு இன்று திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிற்பகல் 2 மணியளவில் நேரில் வந்து மலர் வளையம் வைத்து மனோரமாவுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் மனோரமாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் அவரது தோழி சசிகலாவும் வந்திருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், மனோரமாவுடன் பல திரைப்படங்களில் நடித்ததை நினைவூட்டியதுடன், அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment