நகரியில் போராட்டம் நடத்த 144 தடை உத்தரவை மீறி எம்.எல்.ஏ.க்களுடன் காரில் சென்ற நடிகை ரோஜாவை காவல்துறையினர் கைது செய்தனர்.
சித்தூர் நகரி நகராட்சி ஆணையராக பணியாற்றி வருபவர் பாலாஜி நாத் யாதவ். இவருக்கும், நகராட்சி முன்னாள் தலைவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் சுரேஷ் என்பவருக்கும் இடையே, நகராட்சி அலுவலகத்தை இடமாற்றம் செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, சுரேஷ் தனது ஆதரவாளர்களுடன் உருட்டுக்கட்டையால் அதிகாரி பாலாஜி நாத்தை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் குறித்து பாலாஜி நாத் கொடுத்த புகாரின்பேரில் நகரி காவல்துறையினர் சுரேஷ் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா, கட்சி தொண்டர்களுடன் நகரி நகராட்சி அலுவலகம் முன்னர் இதைத் கண்டித்து ஊர்வலம், மற்றும் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், சித்தூர் காவல்துறை சூப்பிரண்டு சீனிவாஸ், வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நகரியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.
இந்தத் தடையை மீறி போராட்டம் நடத்த ரோஜா, திருப்பதியில் இருந்து தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் நகரிக்கு வந்தார்.
இது குறித்து, தகவல் அறிந்த காவல்துறையினர், ரோஜா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சென்ற கார்களை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
அப்போது, காவல்துறையினர் வந்த கார் மோதியதில், எம்.எல்.ஏ.பாஸ்கர் ரெட்டி காலில் லேசாக காயம் ஏற்பட்டது.
இதைத் தெடர்ந்து, பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில், காவல்துறையினர் தன் மீது காரை ஏற்றி கொல்ல வந்ததாக ரோஜா புகார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment