தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கண்டித்து தமிழகம் முழுவதும். அ.தி.மு.க வினர் மட்டுமில்லாமல் பிரதமர் மோடியையும் தவறாக கூறியதாக கூறிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கண்டித்து பா.ஜ. க வினரும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பகுதியில் கரூர் மாவட்ட அம்மா பேரவை சாா்பில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினா் காமராஜ் தலைமையில் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் முன்பு மாண்புமிகு தமிழக முதல்வா் அம்மா வை அவதூறாக பேசிய தமிழக காங்கிரஸ் கட்சி தலைவா் இளங்கோவனை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இளங்கோவன் உருவபொம்மையை பாடை கட்டி நடுரோட்டில் வைத்து தீ வைத்து கொளுத்தினா். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான வடிவேல், மாவட்ட கவுன்சிலா் கண்ணதாசன், அண்ணா தொழிற்சங்கம் பொரணி கணேசன், கிருஷ்ணராயபுரம் ஒன்றியகுழுத்தலைவா் முத்துசாமி, கிருஷ்ணராயபுரம் நகர கழக செயலாளா் தங்கதுரை, இளைஞரணி நிர்வாகிகள் யுவராஜ், பிரபாகா், அம்மா பேரவை ஒன்றிய செயலாளா் வீரமணி, கூட்டுறவு சங்க தலைவா் செல்வமணி, தொகுதி இணை செயலாளா் வமு மதியழகன், பேரூர் கழக நிர்வாகிகள் வெங்கடாசலம், பால்ராஜ், கவுன்சிலா் தா்மன் உள்ளிட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள், கட்சி தொண்டா்கள் என 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னாள் மாவட்ட செயலாளர் கு.வடிவேலு தற்போது அனைத்து போராட்டங்களிலும் களம் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், எம்.எல்.ஏ வுமான எஸ்.காமராஜ் செய்திருந்தார்.
முன்னாள் மாவட்ட செயலாளர் கு.வடிவேலு தற்போது அனைத்து போராட்டங்களிலும் களம் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், எம்.எல்.ஏ வுமான எஸ்.காமராஜ் செய்திருந்தார்.
No comments:
Post a Comment