Saturday, 1 August 2015

கரூரில் அடுத்தடுத்து அ.தி.மு.க வினருக்கு செக் வைக்கும் பொதுமக்கள் அமைச்சரை தொடர்ந்து கரூர் நகராட்சி தலைவருக்கு அடுத்த சோதனை 5 லட்சத்து 64 ஆயிரம் சதுர அடியை நிலத்தை மோசடி செய்ததாக கரூர் நகராட்சி தலைவரை கண்டித்து கரூர் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போஸ்டர் அடித்து ஒட்டியதால் பரபரப்பு – அப்போஸ்டர்களை சமூக விரோதிகளை கொண்டு கிழித்து எறிந்ததற்கு வாலிபர் சங்கம் கண்டனம்

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பதவியை பறிக்கப்பட்டதை  தொடர்ந்து அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு அடுத்தடுத்து சோதனை நிகழ்ந்து வருகிறது. கரூர் பெருநகராட்சியின் தலைவராக உள்ளவர் அ.தி.மு.க வை சார்ந்த தமிழ்நாடு செல்வராஜ், இவர் தனது மனைவி மற்றும் முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ஆகியோர் மீது 5 லட்சத்து 64 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பொதுமக்களை ஏமாற்றி வளைத்து போட்டதாக கூறி கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் அடித்து ஓட்டப்பட்டது. இதையறிந்த கரூர் பெருநகராட்சி தலைவர் தமிழ்நாடு செல்வராஜ் கூலி படைகள் கொண்டு அப்போஸ்டர்களை கிழித்து எறிந்ததாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாலிபர் சங்கமும், கரூர் அருகே வெங்கமேடு கொங்கு நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கு முன்னதாக கொங்கு நகர் பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் கடந்த 2005 ம் ஆண்டே வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இதில் உயர்நீதிமன்றம் உத்திரவிட்டும், காலியாக உள்ள நிலத்தை மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொது உபயோக நிலங்களில் வீட்டு மனை கட்டுவதற்கும், வரைபட அங்கீகாரத்திற்கும் எந்த வித அனுமதியும் வழங்க கூடாது என்றும், வீட்டு வரி வசூல் செய்யக் கூடாது என உத்திரவிட்டும் கரூர் நகராட்சி தலைவர் அ.தி.மு.க வை சார்ந்த தமிழ்நாடு செல்வராஜ் செய்து வருவதாகவும், மீண்டும் இதே போல இவர் செயல்களில் ஈடுபட்டால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஒன்றினைந்து தமிழ்நாட்டையே திரும்பி பார்க்கும் அளவிற்கு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு வாலிபர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

பேட்டி : பி.தியாகராஜன் – தலைவர் – கொங்குநகர் குடியிருப்போர் நலச்சங்கம்



No comments:

Post a Comment