கரூர் அருகே பெரிய திருமங்கலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்ட ம.தி.மு.க செயலாளரின் தோட்டத்தில் மாநில அளவிலான ம.தி.மு.க தொண்டரணி பயிற்சி முகாம் நேற்று
(16-08-15) தொடங்கியது. கரூர் மாவட்டச் செயலாளர் பரணி.மணி முன்னிலையில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் மாநில தொண்டரணி இயக்குநர் சு.ஜீவன் ஒருங்கிணைப்பில், மாநில தொண்டரணி செயலாளர் ஆ.பாஸ்கர சேதுபதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில தொண்டரணி துணை அமைப்பாளர்கள் கே.சக்திவேல், வெ.இரவிச்சந்திரன், முசிறி இரவிச்சந்திரன், தம்பி சிவாஜி, மு.காந்தி, முனிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த பயிற்சி முகாமில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொண்டரணியினர் குவிந்திருந்தனர்.
16 - ம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியானது வரும் 19
ம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், இந்த நிகழ்ச்சியை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ பயிற்சி முகாமை நிறைவு செய்ய உள்ளதாகவும் தொண்டரணி இயக்குநர் ஜீவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், ம.தி.மு.க தொண்டரணி மற்ற அரசியல் கட்சிகளுக்கு அப்பாற் பட்டு விளங்குவதாகவும், எட்டாவது மாநில அளவிலான பயிற்சி முகாம் இனி அரசியல் வரலாற்றில் எக்காலத்திலும் எட்டாவது பயிற்சி முகாமாக அமையும் என ஜீவன் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ம.தி.மு.க செயலாளர் பரணி.கே.மணி, அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கலையரசன், கரூர் நகர செயலாளர் என்.பி.கே.பாலமுருகன், புளியம்பட்டி கந்தசாமி, ஆர்.என், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முத்துராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இம்முகாமை முன்னிட்டு உணவு, உறைவிடம், உடை, முதலுதவி ஆகியவனவற்றைகளை கரூர் மாவட்ட ம.தி.மு.க வினர் சிறப்பாக செய்து வருகின்றனர்
பேட்டி : சு.ஜீவன் – ம.தி.மு.க தொண்டரணி இயக்குநர்
No comments:
Post a Comment