Sunday, 2 August 2015

கரூர் மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க அலுவலகமான கரூர் தாயகத்தில் தொண்டரணி தேர்வு மாவட்டச் செயலாளர் பரணி மணி தலைமையில் நடைபெற்றது

கரூர் மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க அலுவலகமான தாயகத்தில் இன்று கரூர் மாவட்ட கழக செயலாளர் பரணி.மணி தலைமையில் தொண்டரணி தேர்வு நடைபெற்றது. அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் சீனீவாசப்பெருமாள் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில தொண்டரணி துணை செயலாளர்கள் தம்பி சிவாஜி, சாஞ்சி காந்தி ஆகியோர் கலந்து கொண்டு கரூர் மாவட்டத்தில், கரூர், மண்மங்கலம், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, குளித்தலை உள்ளிட்ட 6 வட்டங்களை சார்ந்த ஏராளாமான இளைஞர்களை தொண்டரணியில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்பட்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் தொண்டரணியில் சேரும் இளைஞர்களின் உயரம், எடை, மார்பு விரிவில் மற்றும் சுருங்கிய நிலையில் ஆகியவன குறித்து பரிசோதிக்கப்பட்டன,  மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளர் ஆர்த்தியா பொன்னுசாமி, துணை செயலாளர் திருவை.வி.பி.கேசவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அருள்முருகன், துணை செயலாளர் சிபி ராஜ், மாணவரணி செயலாளர் பி.ஆர்.பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் தாந்தோன்றி கபினி சிதம்பரம், க.பரமத்தி கரியாம்பட்டி இளங்கோ, கிருஷ்ணராயபுரம் தமிழ்ச்செல்வன், கரூர் நகர செயலாளர் என்.பி.கே.பாலமுருகன், இனாம் கரூர் நகர செயலாளர் அம்மன் தங்கராஜ் மாநில அணி நிர்வாகிகள் இலக்கிய அணி துணை செயலாளர் பொத்தனூர் ஈழபாரதி, இளைஞரணி துணை செயலாளர் ஆசை சிவா, மாவட்ட தொண்டரணி செயலாளர்கள் முத்துராஜ், கண்ணன், மாரிமுத்து, மாவட்ட மகளிரணி செயலாளர் பாப்பாத்தி குமரேஷன், சிறுபான்மை பிரிவு செயலாளர் எஸ்.அமிருதீன், தாந்தோன்றி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரவிக்குமார் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment